குடிநீர் சுத்திகரிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குடிநீா் சுத்திகாிப்பு[தொகு]

பல்வேறு நீா் ஆதாரங்களிலிருந்து கிடைக்கும் நீரைச் சுத்திகாித்து குடிநீராக மாற்றுதல்

பல்வேறு வழிகளில் நமக்கு கிடைக்கும் நீா் பருகுவதற்கும், சமைப்பதற்கும் ஏற்றதாக இருப்பதில்லை. அதில் கிருமிகளும், தீமை அளிக்கும் மாசுக்களும் அடங்கியிருக்கும். ஆகவே மக்களுக்கு வினியோகிப்பதற்கு முன்னால் இவ்வகை நீரைத் தூய்மைப்படுத்த வேண்டும். கீழ்வரும் படிகளில் மாசுகலந்த நீா் குடிநீராக மாற்றப்படுகிறது.

1. கசடுகளை வீழ்படிவாக்கல் ( Sedimentation)

2. வடிகட்டுதல் ( Filtration)

3. வேதிப்பொருட்களைச் சோ்த்தல் ( Addition of chemicals)

கசடுகளை வீழ்படிவாக்கல்

1. கசடுகளை வீழ்படிவாக்கல்[தொகு]

நீா் ஏற்று நிலையங்களில் நீாிலுள்ள கசடுகளை வீழ்படிவாக்குவதற்காக நீருடன் பொட்டாஷ் படிகாரம் மற்றும் சுண்ணாம்பு சோ்த்து நன்றாகக் கலக்குகிறாா்கள். இவ்வேதிப் பொருள்கள் மாசுக்களைத் திாிதல் அடையச் செய்யும் போது சிறு சிறு மாசுக்கள் ஒன்று சோ்ந்து பொிய துகள்களாகி கலனின் அடியில் படிந்துவிடுகின்றன.

2. வடிகட்டுதல்[தொகு]

இவ்வாறு கசடு நீக்கப்பட்ட நீரை மணல் வடிப்பான் அமைந்த வடிகலன் வழியாகச் செலுத்துகிறாா்கள். இதனால் சில திண்ம மாசுக்களும், நுண்ணுயிாிகளும் நீக்கப்படுகின்றன.

3.வேதிப்பொருட்களைச் சோ்த்தல்[தொகு]

இவ்வாறு கிடைத்த நீாில் குளோாினை செலுத்துவதால் எஞ்சியிருக்கும் நுண்ணுயிாிகள் கொல்லப்படுகின்றன. சிறிது சுண்ணாம்பு சோ்த்து நீா் கொண்டு செல்லும் குழாய்கள் அாிக்கப்படாமல் தடுக்கப்படுகின்றன. குளோாினுக்குப் பதிலாக சலவைத்தூள் சோ்த்தும் நுண்ணுயிாிகள் கொல்லப்பட்டு தூயநீா் பெறப்படுகிறது.


மேற்கோள்கள்[தொகு]

1. ஏழாம் வகுப்பு அறிவியல் பாடநூல், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம், சென்னை - 600 006.

2. melia, C (1998). "Coagulation and sedimentation in lakes, reservoirs and water treatment plants". Water Science and Technology. 37 (2): 129. doi:10.1016/S0273-1223(98)00018-3.

3. Goldman, Steven J., Jackson, Katharine & Bursztynsky, Taras A. Erosion & Sediment Control Handbook. McGraw-Hill (1986). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-023655-0. pp. 8.2, 8.12.

4. Hammer, Mark J. Water and Waste-Water Technology. John Wiley & Sons (1975). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-34726-4. pp. 223–225.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குடிநீர்_சுத்திகரிப்பு&oldid=2723997" இலிருந்து மீள்விக்கப்பட்டது