மஞ்சணப்பெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மஞ்சணப்பெட்டி என்பது பனையோலையைக் கொண்டு செய்யப்படும் மிகச் சிறிய ஒரு பெட்டியாகும். உள்ளங்கைக்குள் அடங்கிவிடும் இந்தப் பெட்டிக்கு சிறு முடியும் உண்டு. இதை குருத்தோலை கொண்டு செய்வர். சிறு தெய்வங்களுக்குப் படைக்கும் மஞ்சள், குங்குமம், சந்தனம் போன்றவற்றை இந்தப் பெட்டியில் வைப்பதால், வழிபாட்டில் முக்கியப் பங்கெடுக்கும் தன்மை கொண்டதுமான பெட்டி இது ஆகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. காட்சன் சாமுவேல் (16 சூன் 2018). "மஞ்சணப்பெட்டி எனும் 'மங்களம்'". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 18 சூன் 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சணப்பெட்டி&oldid=3577956" இலிருந்து மீள்விக்கப்பட்டது