வில்கெம் உண்ட்
1902 ஆம் ஆண்டில் வில்கெம் உண்ட் | |
பிறப்பு | மான்ஹீம் அருகில் உள்ள நெக்காரவ், கிராண்ட் டச்சி பாடன், ஜெர்மன் கூட்டமைப்பு | 16 ஆகத்து 1832
---|---|
இறப்பு | 31 ஆகத்து 1920[1] கிரோபோதென், சாக்சனி, வெய்மர் குடியரசு | (அகவை 88)
வதிவு | Germany |
தேசியம் | German |
துறை | பரிசோதனை உளவியல், பண்பாட்டு உளவியல், மெய்யியல், உளவியல் |
நிறுவனம் | லீப்சிக் பல்கலைக்கழகம் |
Alma mater | டல்பெர்க் பல்கலைக்கழகம் (MD, 1856) |
துறை ஆலோசகர் | கார்ல் எவால்ட் அசி |
முக்கிய மாணவர் | ஆஸ்வால்டு குல்பே, உகோ மன்ஸ்டெர்பெர்க், ஜேம்ஸ் மெக்கீன் கேட்டல், ஜி. இசுடான்லி ஆல், எட்வர்ட் பி. டிட்செனர், லைட்னர் விட்மெர் |
அறியப்பட்டது | பரிசோதனை உளவியல் பண்பாட்டு உளவியல் அமைப்புவாதம் (உளவியல்) உள்நோக்கு உணர்ச்சி |
வில்கெம் மேக்சிமிலியன் உண்ட் (Wilhelm Maximilian Wundt) (இடாய்ச்சு: [vʊnt]; 16 ஆகத்து 1832 – 31 ஆகத்து 1920) ஒரு செருமானிய மருத்துவர், உடற்கூறியல் நிபுணர், மெய்யியலாளர், மற்றும் பேராசிரியர் ஆவார். இவர் நவீன உளவியலை நிறுவியர்களில் ஒருவராக அறியப்படுகிறார். உண்ட், உளவியலை மெய்யியல் மற்றும் உயிரியல் என்பதற்கு மாறாக ஒரு அறிவியல் என்றார். இவர் தான் தன்னை ஒரு உளவியலாளர் என்று எப்போதும் அழைத்துக் கொண்டவர் ஆவார்.[2] இவர் பரவலாக "பரிசோதனை உளவியலின் தந்தை" என அழைக்கப்படுகிறார்.[3][4] 1879 ஆம் ஆண்டில், லீப்சிக் பல்கலைக்கழகத்தில் முதல் உளவியல் ஆய்வுக்கூடத்தை நிறுவினார். இந்த முயற்சி உளவியலைத் தனிப்பட்ட அறிவின் புலமாகச் செய்தது.[5] இந்த ஆய்வகத்தை உருவாக்கியதன் மூலம் மற்ற அறிவியலின் மற்ற புலங்களிலிருந்து வேறுபட்ட புலமாக உளவியலை நிறுவ முடிந்தது. இவர் தான் உளவியலுக்காகவும், நிறுவனத்தில் ஆய்வுகளை வெளியிடுவதற்காகவும் கல்விசார் பருவ இதழ் ஒன்றைத் தொடங்கினார்.[6]
1991 ஆம் ஆண்டில் அமெரிக்க உளவியலாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்று, உண்டின் புகழை முதல் இடத்தில் வைத்தது. இந்த தகுதியானது அவருக்கு அனைத்துக் காலத்திலும் மேம்பட்ட நிலையில் இருந்ததற்காக 29 அமெரிக்க வரலாற்றுச் சிறப்பு மிக்க உளவியலாளர்கள் வழங்கிய மதிப்பீடுகளால் தரப்பட்டது. இந்த ஆய்வில் வில்லியம் ஜேம்ஸ் மற்றும் சிக்மண்ட் பிராய்ட் ஆகியோர் இரண்டாவது மற்றும் மூன்றாவது நிலைையப் பிடித்தனர்.[7]
வாழ்க்கை வரலாறு
[தொகு]உண்ட் நெகாரு, பேடனில் (தற்போது மான்கீமின் பகுதி) 1832 ஆம் ஆண்டு, ஆகத்து மாதம் 16 ஆம் நாள் மேக்சிமிலியன் உண்ட் (லுாத்தரன் அமைச்சர்) மற்றும் அவரது மனைவி மேரி பிரெட்ரிக் நீ அர்னால்ட் ஆகியோருக்கு 17 ஆவது குழந்தையாகப் பிறந்தார். உண்டின் தந்தை வழி தாத்தாவான பிரெட்ரிக் பீட்டர் உண்ட் (1742–1805), ஐடல்பெர்க்கில் புவியியல் பேராசிரியராகவும், கிறித்தவப் பாதிரியாராகவும் இருந்தார். உண்டுக்கு பதினான்கு வயதான போது, அவரது குடும்பமானது, பாடன்-வுயர்ட்டம்பெர்கில் உள்ள எய்டெல்சீம் என்ற சிறிய இடைக்காலத்திய நகருக்கு குடிபெயர்ந்தனர்.[8]
பொருளாதார ரீதியாக நிலையானதாக கருதப்பட்ட செருமனியில் பிறந்த உண்ட் கல்வி, மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் செல்வத்தை மீண்டும் முதலீடு செய்த காலத்தில் வளர்ந்தார். அறிவின் முன்னேற்றத்திற்கான பொருளாதார முயற்சியானது, ஒரு புதிய உளவியல் ஆய்வு முறையின் வளர்ச்சியை ஊக்குவித்ததுடன், உண்ட் தற்போது அடைந்துள்ள முன்னணி உளவியலாளர் என்ற நிலைக்கு வளர்ச்சியடைவதற்கும் உதவியது.[9]
உண்ட் 1851 முதல் 1856 வரை டபிங்கென் பல்கலைக்கழகம், ஐடல்பேர்க் பல்கலைக்கழகம், மற்றும் பெர்லின் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் பயின்றார். உண்ட் ஐடெல்பெர்க் பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்வதற்கு முன்னர் ஜோஹன்னஸ் பீட்டர் முல்லர் உடன் சிறிது காலம் படித்தார். 1858 ஆம் ஆண்டில் இயற்பியல் அறிஞரும் உடற்செயலியல் வல்லுநருமான எர்மன் வான் எல்ம்ஹோல்ட்சின் உதவியாளரானார். அங்கு அவர் உடற்கூறியல் ஆய்வகப் பாடத்தை கற்பிக்கும் பொறுப்பைக் கொண்டிருந்தார். 1864 ஆம் ஆண்டில் அவர் மானுடவியல் மற்றும் மருத்துவ உளவியலுக்கான இணை பேராசிரியராக ஆனார். மேலும் மனித உடலியல் பற்றிய ஒரு பாடநூலை வெளியிட்டார். எனினும், அவரது விரிவுரைகள் மற்றும் வகுப்புகளின்படி, அவரது முக்கிய ஆர்வம் மருத்துவத் துறையில் இல்லை என்பதையும், அவர் உளவியல் தொடர்புடைய பாடங்களில் அதிகம் ஈர்க்கப்பட்டார் என்பதையும் அறிய முடிகிறது. உளவியல் பற்றிய அவரது விரிவுரைகள் 1863-1864 இல் மனித மற்றும் விலங்கு உளவியல் மீதான சொற்பொழிவுகள் என்ற நூலாக வெளியிடப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ See Wundt's gravestone (image).
- ↑ Neil Carlson, Donald C. Heth: Psychology the Science of Behaviour. Pearson Education Inc. 2010. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0205547869. p. 18.
- ↑ "Wilhelm Maximilian Wundt" in Stanford Encyclopedia of Philosophy.
- ↑ Tom Butler-Bowdon: 50 Psychology Classics. Nicholas Brealey Publishing 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1857884736. p. 2.
- ↑ Wundt: Das Institut für experimentelle Psychologie. Leipzig, 1909, 118–133.
- ↑ Lamberti: Wilhelm Maximilian Wundt 1832–1920. Leben, Werk und Persönlichkeit in Bildern und Texten. 1995.
- ↑ J. H. Korn, R. Davis, S. F. Davis: "Historians' and chairpersons' judgements of eminence among psychologists". American Psychologist, 1991, Volume 46, pp. 789–792.
- ↑ Lamberti, 1995, pp. 15-22.
- ↑ Craig, G. A. (1978) Germany, 1866-1945, pp. 198. Retrieved from: https://quod-lib-umich-edu.jproxy.nuim.ie/cgi/t/text/text-idx?c=acls;idno=heb00821.0001.001[தொடர்பிழந்த இணைப்பு]