எலிசபெத் உரோயமர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எலிசபெத் உரோயமர், 1963

எலிசபெத் உரோயமர் (Elizabeth Roemer) (1929–ஏப்பிரல் 8, 2016)[1] ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் வால்வெள்ளிகளையும் சிறுகோள்களையும் ஆய்வு செய்தார்.

இவர் அரிசோனா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆவார்.[2] இவர் 1930 உலூசிபெர், 1983 போக் ஆகிய இரு முதன்மைப்பட்டை சிறுக்கோள்களைக் கண்டுபிடித்தார்.[2] மேலும், 25 ஆண்டுகளின் வால்வெள்ளிகளுக்கான ஒளிப்படத் தட்டுகளைத் திரட்டி, வால்வெள்ளிக்கருக்களின் தோற்றப் பருமைகளை பொருத்தமாக நிரல்படுத்தினார். இஅர் 79 சிற்றலைவு நேர வால்வெள்ளிகளை தன் வாழ்நாளில் கண்டுபிடித்தார். இவர் 1975 இல் வியாழனின் 67 நிலாக்களில் 17 ஆம் நிலாவாகிய தெமிசுட்டோவை பிறருடன் இணைந்து கண்டுபிடித்தார்.[3]


சுவிட்சர்லாந்து வானியலாளராகிய பவுல் வைல்டு 1961 இல் கண்டுபிடித்த உட்பட்டைச் சிறுகோள் 1657 உரோயமரா இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது (சி.கோ.சு. 2347).[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Elizabeth Roemer, 1929-2016".
  2. 2.0 2.1 "Elizabeth Roemer (1929- ), at her desk at the University of California Lick Observatory, c. 1963". siris-archives.si.edu. பார்க்கப்பட்ட நாள் 3 July 2016.
  3. Brian G. Marsden (October 3, 1975). "IAUC 2845: Probable New Satellite of Jupiter". International Astronomical Union Central Bureau for Astronomical Telegrams. பார்க்கப்பட்ட நாள் 3 July 2016.
  4. Schmadel, Lutz D. (2007). Dictionary of Minor Planet Names – (1657) Roemera. Springer Berlin Heidelberg. பக். 132. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-540-00238-3. https://link.springer.com/referenceworkentry/10.1007/978-3-540-29925-7_1658. பார்த்த நாள்: 3 July 2016. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எலிசபெத்_உரோயமர்&oldid=2481125" இலிருந்து மீள்விக்கப்பட்டது