அந்தோனியா பெரின் மொரீராசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அந்தோனியா பெரின் மொரீராசு (Antonia Ferrín Moreiras) (அவுரென்சு, 13 மே 1914 – சாந்தியாகோ தெ கம்போசுதெலா, 6 ஆகத்து 2009) ஒரு கனிதவியலாளரும் பேராசிரியரும் முதல் கலீசிய பெண் வானியலாலரும் ஆவார். இவரது முதன்மையான வானியல் பங்களிப்புகளாக நிலாவால் பால்வெளி மறைப்புகள், இரட்டை விண்மீன்களின் அளவீடுகள், வானளக்கையியல் அளவீடுகள், இரு நிலைக்குத்துகள் ஊடாக விண்மீன்கள் கட்த்தலைத் தீர்மானித்தல் ஆகியவை அமைகின்றன. இவை அனைத்திலும் இவர் சந்தியாகோ தெ கம்போசுடெலா பல்கலைக்கழகத்தின் வான்காணகத்தில் பணிபுரிந்தபோது ஆய்விகள் மேற்கொண்டார். .[1] இவர் எசுப்பானிய உள்நாட்டுப் பொருக்கு முன்பு, சந்தியாகோ தெ கம்போசுடெலா பல்கலைக்கழகத்தில் வேதியியலிலும் மருந்தியலிலும் இளவல் பட்டத்தையும் கற்பித்தல் பட்டயமும் பெற்றதோடு இரண்டு ஆண்டுகள் கணிதவியலும் படித்தார். சில ஆண்டுகளுக்குப் பின்னர் இவர் மாட்ரிடு கம்பிளூட்டன்சு பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளவல் பட்டமும் பெற்றுள்ளார். ,[2]

இவர் 1963 இல் வானியலின் சிக்கலைத் தீர்க்க ஆய்வுரை நல்கிய முதல் பெண்மணியானர்: Observaciones de pasos por dos verticales (ஆங்கிலத்தில், Observations of passages of stars through two verticals (தமிழில், இரு நிலைக்குத்துகள் ஊடாக விண்மீன்களின் கடப்பு)). இந்த ஆய்வுரையும் முதலில் சந்தியாகோ தெ கம்போசுடெலா பல்கலைக்கழகத்தில் கணிதவியல் புலத்தில் மேற்கொள்ளப்பட்டது. ,[3]

பொருளியல் நெருக்கடியால் இவர் ஆய்வும் பணியும் இணைந்தே மேற்கொள்ள நேர்ந்தது. என்றாலும் இவர் தன் கல்வி இலக்கை எட்ட ஆய்வுநல்கைகள் கைக்கொடுத்தன.[2]

வாழ்க்கை[தொகு]

இளமை[தொகு]

உயர்கல்வியும் தொழில்முறை வாழ்க்கையும்[தொகு]

பெரின் 1984 இல் ஓய்வு பெற்றார்.[4]

தகைமைகள்[தொகு]

இவர் 2008 மே 24 இல் சந்தியாகோ தெ கம்போசுடெலா பல்கலைக்கழகத்தின் கணிதவியல்புலப் புரவலராக அறிவிக்கப்பட்டார்.[5]

இவரது பெயர் தாங்கியவை[தொகு]

  • சந்தியாகோ தெ கம்போசுடெலா பல்கலைக்கழகத்தின் கணிதவியல்புல விரிவுரை அறை.
  • விர்கோ பல்கலைக்கழகத்தின் பாலின அக்கறையோடு கல்விப் பாடங்களையும் தகவல் வாயில்களையும் உருவாக்குவதற்கான விருது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Antonia Ferrín Moreiras. La primera astrónoma gallega" (in Spanish). Archived from the original on பிப்ரவரி 3, 2021. பார்க்கப்பட்ட நாள் June 28, 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unrecognized language (link)
  2. 2.0 2.1 "Las primeras docentes de ciencias en la Universidad de Santiago" (PDF). aeihm.org (in Spanish). பார்க்கப்பட்ட நாள் June 29, 2016.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. "Antonia Ferrín Moreiras. A contadora de estrelas". Cultura Galega (in Galician). பார்க்கப்பட்ட நாள் June 28, 2016.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  4. 4.0 4.1 "Antonia Ferrín Moreiras" (PDF) (in Spanish). பார்க்கப்பட்ட நாள் June 29, 2016.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  5. "Fallece Antonia Ferrín Moreiras, pionera en las matemáticas y la astronomía gallega" (in Spanish). பார்க்கப்பட்ட நாள் June 29, 2016.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)