உள்ளடக்கத்துக்குச் செல்

விற்பி நீமெலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விற்பி நீமெலா (Virpi Sinikka Niemelä) (எல்சின்கி, 26 திசம்பர் 1936 – அர்ஜெண்டீனா, 18 திசம்பர் 2006) ஒரு முன்னணி பின்னிய அர்ஜெண்டீன வானியலாளர் ஆவார். இவர் அரசு வானியல் கழகத்தின் இணையுறுப்பினராகத் தேர்வான இரண்டாம் அர்ஜெண்டீனர் ஆவார்.

பின்லாந்தில் பிறந்த இவர் குடும்பத்தோடு 1954 இல் அர்ஜெண்டீனாவுக்குக் குடிபெயர்ந்தார். இவர் அர்ஜெண்டீனாவின் குடிமகளாகி, திருமணமுமாகி இரு ஆண்குழந்தைகளுக்குத் தாயாக உள்ளார்.

இவர் ஜார்ஜ் சகாதேயுடன் மாணவராகச் சேர்ந்து, 1974 இல் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இவர் அவரோடு வாழ்க்கை முழுவதும் இணைந்து பணிபுரிந்து வருகிறார். இவரது பணி பெரிதும் உயர்பொருண்மை விண்மீன்களிலும் இரும விண்மீன்களிலும் அமைந்தது; குறிப்பாக வுல்ப்-இரேயத் விண்மீன்களில் அமைந்த்து. மெகல்லானிக முகில்களில் உள்ள வுல்ப்-ரேயத் விண்மீன்களின் ஆய்விலும் உடுக்கண இணைவுகளின் உயர்பொருண்மை விண்மீன்களின் ஆய்விலும் அவற்றினைச் சுற்றியமைந்த உடுக்கணவெளிக் குமிழிகளின் ஆய்விலும் இவர் குறிப்பிடத்தகுந்த முன்னோடியாவார். இவர் பல மாணவருக்கு ஊக்கமூட்டி அர்ஜெண்டீனாவில் வானியலை வளர்த்தெடுத்தார்.

இவரது எழுபதாம் ஆண்டு நினைவாக இவரது பிறந்த நாளில், கார்லியோவில் 2006 ஆம் ஆண்டு திசம்பர் 11 முதல் 14 வரை ஒரு பன்னாட்டுப் பணிப்பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் இவரது பெயரில் 5289 எனும் விண்மீன் பெயரிடப்பட்டது. என்றாலும் இவர் தனது பிறந்த நாளுக்கு முன்பே இறந்துவிட்டார்.

மேற்கோள்கள்

[தொகு]
  • Obituary, Astronomy and Geophysics, June 2007, 48(3) page 3.37
"https://ta.wikipedia.org/w/index.php?title=விற்பி_நீமெலா&oldid=4041969" இலிருந்து மீள்விக்கப்பட்டது