அஜய் தாகூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அஜய் தாக்கூர் (Ajay Thakur) (பிறப்பு மே 01, 1986) ஒரு சிறந்த கபாடி விளையாட்டு வீரர் ஆவார். 2016 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை ஈரானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் 12 புள்ளிகள் எடுத்து, உலக கோப்பை பெற்றுத் தந்தார்.

தோற்றம்[தொகு]

இமாச்சல பிரதேசத்தில் உள்ள நளகார் நகராட்சி தபோதா கிராமத்தில் பிறந்தார். இவர் 1.85 மீ உயரம் உடையவர்.

விருதுகள்[தொகு]

  • 2007 ஆம் ஆண்டு ஆசியன் உள்ளரங்கப் போட்டிகளில் தங்கப் பதக்கம் பெற்றார்.
  • 2014 ஆம் ஆண்டு ஆசியப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றார்.
  • 2016 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்த உலகக் கோப்பை போட்டிகளில் 68 புள்ளிகள் எடுத்துள்ளார்.

புரோ கபாடி[தொகு]

2014, 2015 மற்றும் 2016 ஆண்டுகளில் பெங்களுரு புல்ஸ், புனேறி பல்தான் அணிகளுக்காக விளையாடியுள்ளார். 2017 ஆம் ஆண்டு புரோ கபாடியில் சென்னை அணியின் தலைவராக உள்ளார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ajay Thakur". Bengaluru Bulls. Archived from the original on 5 September 2014.
  2. "Kabaddi fever peaks for tonight’s finale". Times of India. TNN. 31 August 2014. http://timesofindia.indiatimes.com/city/bangalore/Kabaddi-fever-peaks-for-tonights-finale/articleshow/41289235.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜய்_தாகூர்&oldid=3586057" இலிருந்து மீள்விக்கப்பட்டது