உயிர்ப்பொருள் ஒளிஉமிழ்தல்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
உயிரொளி உமிழ்வு (Bioluminescence) என்பது உயிரினங்களால் வெளியிடப்படும் ஒளியாகும். இதனை வேதிம ஒளி உமிழ்தல் என்றும் கூறலாம். இந்நிகழ்வு கடல்வாழ் முதுகெலும்பிகள், முதுகுநாணற்ற உயிரிகள், சில பூஞ்சைகள், பாக்டீரியாக்கள் மற்றும் நிலவாழ் முதுகு நாணற்ற உயிரிகளான மின்மினிப் பூச்சிகள் போன்றவற்றில் காணப்படுகிறது.
ஒளி உமிழும் விதம்[தொகு]
இந்த வேதிவினையில் ஒளியானது லூசிபெரின் என்ற நிறமி லூசிபெரேஸ் நொதியால் ஆக்சிஜனேற்றத்திற்கு உட்படும்போது வெளியிடப்படுகிறது. சில உயிரினங்களில் லுாசிபெரின் வேதிப்பொருளிலிருந்து ஒளி வெளிப்படுவதற்கு கால்சியம், மெக்னீசியம் போன்ற துணைக்காரணிகள் தேவைப்படுகின்றன. மேலும் ஏ.டி.பி. மூலக்கூறும் தேவைப்படுகிறது.
பயன்கள்[தொகு]
வெவ்வேறு இன உயிரிகளில் வெவ்வேறு வகையான லுாசிபெரேஸ் நொதி காணப்படுகிறது. உயிரொளி உமிழ்வு ஆழ்கடலில் வாழும் உயிரினங்களில் அதிகம் காணப்படுகிறது. இந்த உயிரினம் உமிழும் ஒளி அதற்குத் தேவையான உணவைக் கண்டறியவும், இனப்பெருக்கத்திற்கு அதன் துணையைக் கண்டறியவும் பயன்படுகிறது.
மேலும் படிக்க[தொகு]
- Victor Benno Meyer-Rochow (2009) Bioluminescence in Focus - a collection of illuminating essays Research Signpost: பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-308-0357-9
- Shimomura, Osamu (2006). Bioluminescence: Chemical Principles and Methods. Word Scientific Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 981-256-801-8.
- Lee, John (2016). "Bioluminescence, the Nature of the Light." The University of Georgia Libraries. http://hdl.handle.net/10724/20031
- Wilson, T.; Hastings, J.W. (1998). "Bioluminescence". Annual Review of Cell Development 14: 197–230. doi:10.1146/annurev.cellbio.14.1.197. பப்மெட்:9891783.