தேசியத் திறனாய்வுத் தேர்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேசியத் திறனாய்வுத் தேர்வு (National Talent Search Examination) என்பது அதிக அறிவாற்றல் மற்றும் கல்வியில் திறமையுடைய மாணவர்களை அடையாளம் கண்டு அங்கீகரிக்கத் தேசிய அளவில் நடத்தப்படும் ஓர் உதவித்தொகைத் திட்டமாகும். இது இந்தியாவில் மிகவும் மதிப்பு வாய்ந்த தேர்வுகளில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரம் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.[1][2]

உதவித்தொகை விவரம்[தொகு]

  • மாதம் ஒன்றிற்கு ரூபாய் 1250 வீதம் 11 வது மற்றும் 12 வது வகுப்பு பயிலும் வரை
  • மாதம் ஒன்றிற்கு ரூபாய் 2000 வீதம் இளங்கலை மற்றும் முதுகலைப்படிப்புப் பயிலும் வரை
  • முனைவர் பட்டப்படிப்பிற்கு பல்கலைக்கழக மானியக்குழு நிர்ணயித்துள்ள விகிதத்தில்.

இட ஒதுக்கீடு[தொகு]

பிரிவு இட ஒதுக்கீடு
தாழ்த்தப்பட்ட பிரிவினர் 15%
பழங்குடியின பிரிவினர் 7.5%
மாற்றுத் திறனாளிகள் 3%

தேர்வு முறை[தொகு]

தேசியத் திறனாய்வுத் தேர்வுமுதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை ஆகிய இரண்டு நிலைகளைக் கொண்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Yuvraj Jangid. "Number of scholarships doubled under National Talent Search Scheme - National Talent Search Examination". National Talent Search Examination.
  2. "National Council Of Educational Research And Training :: National Talent Search Exam".