உள்ளடக்கத்துக்குச் செல்

பொட்டாமக் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொட்டாமக் வடிநிலம்

பொட்டாமக் ஆறு (listen) ஐக்கிய அமெரிக்காவின் நடு அத்திலாந்திக் பெருங்கடலின் கரையோரம் உள்ள செசுபிக் குடாவில் கலக்கிறது.  சேர்த்து. இவ்வாறு (முதன்மை ஆற்று ஓட்டமும் வட கிளையும்) சுமார் 405 மைல்கள் (652 km)[1] இதன் வடிகால் பரப்பு சுமார் 14,700 சதுர மைல்கள் (38,000 சதுர கிமீ) உடையது.[2] பரப்பளவு அடிப்படையில், இவ்வாறு ஐக்கிய அமெரிக்காவின் அத்திலாந்திக் கரையில் உள்ள நான்காவது பெரியதும் ஐக்கிய அமெரிக்காவில் 21வது பெரியதுமாகும். இதன் கரையில் 5 மில்லியன் மக்களுக்கு மேல் வாழ்கின்றனர்

புவியியல்

[தொகு]

இந்த ஆறு மேரிலாந்துக்கும் வர்சீனியாவுக்கும் பல இடங்களில் எல்லையாக உள்ளது. வர்சீனியாவுக்கும்  வாசிங்டன், டி. சி. க்கும் எல்லையாக உள்ளது. ஆற்றின் வட பகுதியில் மேரிலாந்து உள்ளது.  ஆற்றின் தலைப்பகுதியில் மேரிலாந்துக்கும் மேற்கு வர்சீனியாவுக்கும் எல்லையாக உள்ளது.  ஆறு பெரும்பாலன இடங்களில் மேரிலாந்துக்கு உரியதாக உள்ளது. ஆற்றின் வட கிளையின் தலைப்பகுதி மேற்கு வர்சீனியாவில் உள்ளது. தென் கிளை தொடங்கும் சிறு பகுதி வர்சீனியாவில் உள்ளதை தவிர ஆற்றின் தென் கிளை முழுவதும் மேற்கு வர்சீனியாவில் உள்ளது. ஆற்றின் தென் கிளை முழுவதும் மேற்கு வர்சீனியாவில் உள்ளது.

வாசிங்டன் டி சி யில் பொட்டாமக் ஆறு பின்னனியில் தெரிவது வர்சீனியாவின் ரோசலின் (ஆர்லிங்டன்) பகுதி

பொட்டாமக் ஆறு 405 மைல் நீளமுடையது. இது மேற்கு வர்சீனியாவின் ஃவேர்பாக்சு இசுடோன் என்னுமிடத்தில் தோன்றி மேரிலாந்தின் பாயிண்ட் லுக்அவுட் என்னுமிடத்தில் செசுபிக் குடாவில் கலக்கிறது. இதன் வடிநில பகுதி 14,679 சதுர மைல்களாகும். வட கிளையும் தென் கிளையும் சேருமிடத்திலிருந்து பாயிண்ட் லுக்அவுட் வரை இதன் நீளம் 306 மைல்கள்.[1]  இதன் சராசரி நீர் ஓட்டம் வினாடிக்கு 10,800 கன அடியாகும். வாசிங்டன் டிசியில் பதிவான இவ்வாற்றின் அதிக அளவான நீரோட்டம் வினாடிக்கு 425,000 கன அடியாகும். இது 1936 மார்ச்சு மாதம் பதிவாகியது.  அதே இடத்தில் பதிவான குறைந்த அளவு நீரோட்டம் வினாடிக்கு 600 கன அடியாகும். இது 1966 செப்டம்பர் மாதம் பதிவாகியது.[2]

பொட்டாமக் ஆற்றுக்கு வட தென் கிளைகள் என்று இரு மூலங்கள் உண்டு. வட கிளை மேற்கு வர்சீனியாவின் டக்கர், கிராண்ட், பிரசுடன் கவுண்ட்டிகள் சேருமிடத்தில் மேற்கு வர்சீனியாவின் ஃவேர்பாக்சு இசுடோன்  தோன்றுகிறது. தென் கிளை வர்சீனியாவின் ஐலேண்ட் கவுண்ட்டியில் ஐடவுன் என்னுமிடத்தில் தோன்றுகிறது. இரு கிளைகளும் மேரிலாந்துக்கு அருகில் மேற்கு வர்சீனியாவில் கிரின் இசுபிரிங் என்னுமிடத்தில் இணைந்து பொட்டாமக் ஆறு உருவாகிறது.

பொட்டாமக் பைடுமன்ட் என்ற அப்பலாச்சியன் மலைப்பகுதியில் இருந்து உயரம் குறைவான நிலப்பகுதிக்கு லிட்டில் பால்சு என்னுமிடம் அருகில்  நீரோட்டம் அலைகளால் செல்வாக்கு செலுத்தப்படுகிறது. வாசிங்டன்  டிசியை  கடந்ததும் ஆற்றின் உப்புத்   தன்மை  அதிகரிக்கிறது. ஆற்றின் கழிமுகம் உருவாகிறது. கழிமுகத்தில் அகலமும் அதிகமாகிறது. செசுபிக் குடாவில் கலக்கும் முன் வர்சீனியாவின் இசுமித் பாயிண்ட் என்ற இடத்துக்கும் மேரிலாந்திலுள்ள பாயிண்ட் லுக்அவுட்  என்னுமிடத்திற்கும் இடையே கழிமுகம் 11 மைல் விரிவாக (அகலமாக) உள்ளது.  

வரலாறு

[தொகு]
மவுண்ட் வெர்னானிலிருந்து 
பொட்டாமக்கின் தோற்றம்

பொட்டாமக் ("Potomac" )  என்பது   ஐரோப்பியர்களின்  எழுத்துக்கூட்டல். ஏதாவது கொண்டு வா என்னும் பொருள் படியான  ஐக்கிய அமெரிக்காவிலுள்ள தொல்குடி அமெரிக்கர்களின்  ஊர்புற  பெயரை  அப்படி எழுதினார்கள். [3] அமெரிக்க தொல் குடிகள் கிரேட் பால்சுக்கு மேல் உள்ள ஆற்றுக்கு காட்டுவாத்தின் கூச்சல் என்னும் பொருள் படும் படியாகவும் "[4][5] கிரேட் பால்சுக்கு கீழ் உள்ள ஆற்றுக்கு வாத்துகளின் ஆறு என்னும் பொருள் உள்ளவாறும் பெயர் இட்டிருந்தார்கள்.[6] ஐரோப்பியர்கள் இவ்வாற்றுக்கு பல எழுத்துக்கூட்டல்களை வைத்திருந்தார்கள். 18ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே தற்போதைய பொட்டாமக் (Potomac) என்று  அழைக்கப்பட்டது.[5] 1931ஆம் ஆண்டு இந்த பெயரும் எழுத்துக்கூட்டலும் அதிகாரபூர்வமாக புவியியல் பெயர் அமைப்பு குழுவால் முடிவுசெய்யப்பட்டது.[7]

இவ்வாறு குறைந்தது 2 மில்லியன் ஆண்டுகள் பழைமையானதாக இருக்கலாம் என்றும் 10 முதல் 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் அத்திலாந்திக் பெருங்கடல் தாழ்வான போது இதன் படிவுப்பாறைகள் உருவாகி பின் கிரேட் பால்சு பகுதியில் உரைப்பனிக் காலத்தில் அவை அரிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.[8]

பொட்டாமக் ஆறு புளு ரிட்ஞ் 
மலைகளை அரித்து செல்லும் காட்சி

அமெரிக்க வரலாற்று நிகழ்வுகள் அதிகம் இப்பகுதியில் நடந்துள்ளதால் பொட்டாமக் தேசிய ஆறு என்று புனைப்பெயருடன் அழைக்கப்படுகிறது. அமெரிக்காவின் முதல் குடியரசு தலைவர் சியார்ச் வாசிங்டன் இவ்வாற்றின் கரையிலேயே பிறந்து வளர்ந்தவர். நாட்டின் தலைநகர் வாசிங்டன் டி சியும் இவ்வாற்றின் கரையிலேயே உள்ளது. 1859இல் ஆர்ப்பர் பெர்ரி என்ற இடத்தில் செனடோ ஆறும் பொட்டாமக்கும் கூடும் இடம் அமெரிக்க உள்நாட்டுப் போர் நடந்த காலத்தில் சிறப்பு வாய்ந்ததாகும். பொட்டாக் ஆறும் அதன் கிளை ஆறுகளும் துணை ஆறுகளும் அமெரிக்க உள்நாட்டுப் போரில் சிறப்பு பங்கு வகித்தன. இவ்வாறு கூட்டமைப்பு படைகளையும் ஐக்கிய மாநிலங்களின் படைகளையும் பிரித்து வைத்ததோடு ஐக்கிய மாநிலங்களின் படைக்குக்கு பொட்டாமக்கின் இராணுவம் என்ற பெயரையும் வழங்கியது

ஆர்ப்பர்சு பெர்ரி (மேற்கு வர்சீனியா)  பொட்டாமக்கும்  செனடோ ஆறும் கூடும் இடம்

1864 இல் கிரேட் பால்சில் குடிநீர் எடுக்கும் கருவி பொருத்தப்பட்டதில் இருந்து வாசிங்டன் டி சியின் முதன்மை குடிநீர் மூலமா இவ்வாறே விளங்குகிறது.[9]

சப்பானின் ஆரா ஆறு பொட்டாமக்கின் சகோதர ஆறாக மார்ச்சு 1996 அறிவிக்கப்பட்டது. ஆரா ஆறு டோக்கியோவின் முதன்மை ஆறாகும்.[10]  பில் கிளிண்டன் காலத்தில் 1998 பொட்டாமக் அமெரிக்க பாரம்பரிய ஆறாக அறிவிக்கப்பட்டது..[11]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 U.S. Geological Survey.
  2. 2.0 2.1 "Facts & FAQs". Interstate Commission on the Potomac River Basin (ICPRB), Rockville, MD. September 16, 2009. Archived from the original on January 15, 2010. பார்க்கப்பட்ட நாள் 2010-02-05.
  3. Bright, William (2004). Native American Placenames of the United States. University of Oklahoma Press. p. 396. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8061-3598-4.
  4. Legends of Loudoun: An account of the history and homes of a border county of Virginia's Northern Neck, Harrison Williams, p. 26.
  5. 5.0 5.1 Achenbach, Joel (2004). The Grand Idea: George Washington's Potomac and the Race to the West. Simon and Schuster. pp. 35–36. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-684-84857-0.
  6. Hagemann, James A. (1988).
  7. 597915 U.S. Geological Survey Geographic Names Information System: Potomac River
  8. "THE ORIGIN OF THE POTOMAC RIVER VALLEY AND THE CARVING OF GREAT FALLS". United States Geological Survey. 2014. Archived from the original on 9 ஏப்ரல் 2007. பார்க்கப்பட்ட நாள் 4 November 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  9. Ways, Harry C. (1996).
  10. "(Arakawa - Potomac sister rivers)". Interstate Commission on the Potomac River Basin. 27 January 2012. Archived from the original on December 27, 2013.
  11. "President Clinton: Celebrating America's Rivers". American Heritage Rivers. July 30, 1998. Archived from the original on ஏப்ரல் 28, 2014. பார்க்கப்பட்ட நாள் February 5, 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொட்டாமக்_ஆறு&oldid=4090828" இலிருந்து மீள்விக்கப்பட்டது