திருக்களாச்சேரி நாகநாதசுவாமி கோயில்
Appearance
திருக்களாச்சேரி நாகநாதசுவாமி கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.
அமைவிடம்
[தொகு]இக்கோயில் திருக்கடையூருக்குத் தென்மேற்கில் 6 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. தரங்கம்பாடிக்குத் தென்மேற்கில் 6 கிமீ தொலைவில் தில்லையாடியிலிருந்து காட்டுச்சேரி வழியாகவும் வரலாம்.[1]
இறைவன், இறைவி
[தொகு]இக்கோயிலில் உள்ள மூலவர் குரா மரத்தின் அடியில் மிகப்பெரிய புற்றின் கீழ் ஆதிநாகர் என்ற பெயரில் அமைந்துள்ளார். இறைவி சிவகாமசுந்தரி ஆவார்.[1]
வரலாறு
[தொகு]குரா மரத்தைத் தல மரமாகக் கொண்டதால் திருக்குராச்சேரி என்று அழைக்கப்பட்டு, பின்னர் காலப்போக்கில் திருக்களாச்சேரி என்ற பெயரை இந்த ஊர் பெற்றது. திருமால், பாரத்வாஜர், ஆபஸ்தம்பர் ஆகியோர் வழிபட்டுள்ளனர். நாகப்பாம்பு உருவில் திருமால் சிவனை வழிபட்டதால் மூலவர் நாகநாதர் என்றழைக்கப்படுகிறார்.[1]