அண்ணாமலை சுவாமிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அண்ணாமலை சுவாமிகள் என்பவர் திருச்சுழிக்கு அருகே சமாதியடைந்த சித்தராவார்.[1] இவர் விருதுநகரைப் பூர்வீகமாகக் கொண்டவர். பொற்கொல்லர் சமூகத்தில் பிறந்தவர். இல்லறத்தையும், தொழிலையும் துறந்து துறவியாக ஆனார்.[1]

திருச்சுழிக்கு அருகே பெ. புதுப்பட்டி என்ற ஊரில் ஒரு சோலையில் குடியிருந்தார். இவரைச் சுற்றி எப்போதும் உயிரினங்கள் இருந்து கொண்டே இருக்கும். காலையில் பறவைகள் இவரைத் தேடி வந்து உணவினைப் பெற்றுக் கொள்ளும். குழந்தைகளுக்கு அண்ணாமலை தரிசனத்தை காட்டுதல் போன்ற சித்துகளை செய்துள்ளார்.[1]

சமாதியாகும் முன்பு ஒரு லிங்கத்தினைப் பிரதிஸ்டை செய்து வழிபட்டுள்ளார். அவ்விடத்தில் தற்போது சிவாலயம் அமைக்கப்பட்டுள்ளது.[1]

ஆதாரங்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 சித்தர்கள் அறிவோம்: முன்னை வினையின் முடிச்சை அவிழ்த்தவர்- அண்ணாமலை சுவாமிகள் - எஸ்.ஆர்.விவேகானந்தம் தி இந்து
"https://ta.wikipedia.org/w/index.php?title=அண்ணாமலை_சுவாமிகள்&oldid=2268188" இலிருந்து மீள்விக்கப்பட்டது