சுனில் கில்னானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுனில் கில்னானி (Sunil Khilnani) என்பவர் அவந்தா இருக்கை பேராசிரியராகவும் இலண்டனில் உள்ள இந்திய நிறுவன கிங்க்ஸ் கல்லூரியில் இயக்குநராகவும் உள்ளார். இவர் இந்திய வரலாறு மற்றும் அரசியல் தொடர்பான நூல்களை எழுதியுள்ளார்.[1]

பிறப்பும் கல்வியும்[தொகு]

தில்லியில் பிறந்த சுனில் கில்னானி ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா ஆகிய கண்டங்களில் வளர்ந்தார். கேம்பிரிச்சில் சமூகம் அரசியல் சார்ந்த கல்வி பயின்று முனைவர் பட்டமும் பெற்றார்.

நூல்கள்[தொகு]

அறிவு புலத்தின் வரலாறு, அரசியல் ஆய்வு, நவீன இந்தியாவின் வரலாறு, தற்கால இந்தியாவின் அரசியல் நிலைமை ஆகியன இவர் எழுதிய நூல்களின் கருப்பொருள்களாக உள்ளன. இந்தியா பற்றிய கருத்து, சிவில் சொசைட்டி, ரீஇன்கார்னேசன்[2] போன்ற சில நூல்களை எழுதியுள்ளார்.

விருதுகள்[தொகு]

இந்திய அரசு 2005 ஆம் ஆண்டில் சுனில் கில்னானிக்கு பிரவாசி பாரதிய சம்மான் விருதை வழங்கியது. 2010 இல் பெர்லின் பரிசு இவருக்குக் கிடைத்தது.

மேற்கோள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-06. பார்க்கப்பட்ட நாள் 2016-05-13.
  2. http://www.thehindu.com/opinion/interview/sunil-khilnani-we-exaggerate-the-lives-of-our-historical-subjects/article8375055.ece
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனில்_கில்னானி&oldid=3555249" இலிருந்து மீள்விக்கப்பட்டது