கலிகோ புல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலிகோ புல்
8 ஆவது அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர்
பதவியில்
19 பெப்ரவரி 2016 – 13 சூலை 2016
முன்னையவர்நபம் துக்கி
தொகுதிஹயூலிங் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1969 சூலை
வால்லா, அன்ஜாவ் மாவட்டம், அருணாச்சலப் பிரதேசம்
இறப்பு9 ஆகத்து 2016
தேசியம்இந்தியா
தொழில்அரசியல்வாதி

கலிகோ புல் (Kalikho Pul 1969 சூலை[1] - 2016 ஆகத்து 9) என்பவர் இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த அரசியல்வாதியாவார்.[2][3][4] இவர் அருணாச்சலப் பிரதேசம், அனாஜா மாவட்டத்தில் உள்ள வால்லா என்ற சிற்றூரில் பிறந்தவர்[1]. இவர் மனிதவியல் தொடர்பான துறையில் பட்டம் பெற்றவர். இவர் 1995இல் தீவிர அரசியலில் நுழைந்து அதே ஆண்டில் ஹயூலிங் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரானார். முகுத்மித்தி அரசில் நிதித்துறை அமைச்சராக 2003 முதல் 2007வரை பொறுப்பு வகித்தார்.[5] தொடர்ந்து ஹயூலிங் தொகுதியில் அடுத்தடுத்து ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் நிதி, நீதி, சுகாதாரம், மகளிர் குழந்தைகள் நலம், மீன்வளம் போன்ற துறைகளின் அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர்.

இந்நிலையில் இவர் தலைமையிலான காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 21 பேர் காங்கிரசின் முதலமைச்சரான நபம் துகிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய நிலையில் அருணாச்சலப்பிரதேசத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பல குழப்பங்களுக்கு பிறகு குடியரசுத்தலைவர் ஆட்சி விலக்கப்பட்டு கலிகோ புல்லின் தலைமையில் பிரிந்த 21 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 11 பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன், கலிகோ புல் அருணாச்சலப்பிரதேசத்தின் ஒன்பதாவது முதல்வராக பெப்ரவரி 19, 2016 அன்று பதவியேற்றார்.[6] இதற்கிடையில் ஆட்சி கலைக்கப்பட்டதை எதிர்த்து நபம் துகி வழக்கு தொடர்ந்தார். வழக்கில் உச்சநீதிமன்றம் துகி அரசை கலைக்கும் வகையில், கவர்னர் ராஜ்கோவா பிறப்பித்த உத்தரவுகளுக்கு தடை விதித்து, ஆட்சி கலைப்புக்கு முந்தைய 2015 திசம்பர், 15ல் இருந்த நிலையே தொடர வேண்டும் என்று தீர்ப்பளித்தது இதனால் கலிகோபுல் பதவியில் இருப்பது சட்டவிரோதமானது.[7] இதன்பின் நபம் துக்கி முதலமைச்சராக பொறுப்பேற்றார். பதவியை இழந்து மன அழுத்த்தில் இருந்த கலிகோபுல் 2016 ஆகத்து 9 அன்று தற்கொலை செய்துகொண்டார்.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Kalikho Pul becomes the Chief Minister of Arunachal". Archived from the original on 2016-05-25. பார்க்கப்பட்ட நாள் 2016-02-21.
  2. "Arunachal will see repeat of Kargil, warns minister". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (New Delhi). 29 October 2014. http://timesofindia.indiatimes.com/india/Arunachal-will-see-repeat-of-Kargil-warns-minister/articleshow/44965917.cms. 
  3. http://indianexpress.com/article/india/politics/arunachal-pradesh-supreme-court-kalikho-pul-congress-rebel-bjp-support/
  4. http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/congress-leader-kalikho-pul-to-form-alternate-government-in-arunachal-pradesh/articleshow/51048941.cms
  5. "Apang to formally inaugurate Anjaw district on Feb 14 2007". Archived from the original on 2014-10-29. பார்க்கப்பட்ட நாள் 2016-02-21.
  6. http://www.ndtv.com/india-news/presidents-rule-lifted-in-arunachal-kalikho-pul-to-take-oath-as-chief-minister-1279257
  7. "அருணாச்சல் முதல்வராக பெமா காண்டு அமைச்சரவை குறித்து விரைவில் முடிவு". தினமலர். 17 சூலை 2016. பார்க்கப்பட்ட நாள் 21 சூலை 2016.
  8. "அருணாச்சல் 'மாஜி' முதல்வர் கலிகோ புல்...: பதவி பறிபோன விரக்தியால் விபரீத முடிவு?". தினமலர். 9 ஆகத்து 2016. பார்க்கப்பட்ட நாள் 10 ஆகத்து 2016.
முன்னர்
நபம் துக்கி
அருணாச்சலப் பிரதேச முதல்வர்கள் பட்டியல்
பிப்ரவரி 19, 2016 –
பின்னர்
நபம் துக்கி
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலிகோ_புல்&oldid=3576888" இலிருந்து மீள்விக்கப்பட்டது