உற்பத்திப் பொறியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உற்பத்திப் பொறியியல்(ஆங்கிலம்:Production engineering) என்பது உற்பத்தி தொழிநுட்பத்துடன்,முகாமைத்துவ விஞ்ஞானத்தை ஒன்றிணைத்து மேற்கொள்ளப்படும் ஒரு செயற்பாடாகும்.பொதுவாக ஒரு உற்பத்திப் பொறியியலாளர் பொறியியல் செயற்பாடுகள் குறித்த பரந்த அறிவினைக் கொண்டிருப்பதுடன்,உற்பத்தி சம்பந்தப்பட்ட முகாமைத்துவ சவால்கள் தொடர்பில் அவதானமாக இருப்பார்.உற்பத்தி செயற்பாடுகளை சீராக,சிறப்பான முறையில் மற்றும் பொருளதார சிக்கனத்துடன் செய்வதே இதன் இலக்காகும்.

உற்த்திப் பொறியியலானது வார்த்துருக்கு ஒட்டுதல்,இயந்திர செயற்பாடுகள்,இணைப்பு முறைகள்,உலோகம் வெட்டுதல்,கருவி உற்பத்தி செய்தல்,அளவியல்,இயந்திரக் கருவிகள்,இயந்திர முறைமைகள்,தானியக்கமாக்கல்,அங்கமாகி மற்றும் துளை,டை மற்றும் மோல்ட் வடிவமைப்பு,பொருள்சார் விஞ்ஞானம், வாகன உதிரிப்பாகங்கள் வடிவமைப்பு ,இயந்திர வடிவமைப்பு மற்றும் உற்பத்தி போன்ற பிரயோகங்களை உள்ளடக்கியுள்ளன.உற்பத்தி பொறியியலானது கணிசமாக தொழிற்துறை பொறியியல் மற்றும் உற்பத்தியாக்கல் பொறியியல் என்பவற்றுடன் ஒன்றுக்கொன்று ஒத்துச்செல்கின்றது.

தொழிற்துறையில்,ஒருமுறை வடிவமைப்பு உணரப்படின், உற்பத்திப் பொறியியல் எண்ணக்கருக்களாக வேலைஆய்வு,பணிச்சூழலியல், செயற்பாட்டு ஆய்வு,உற்பத்தி முகாமைத்துவம்,பொருள்சார் முகாமைத்துவம்,உற்பத்தி திட்டமிடல் என்பன காணப்படும்.இது செயல்திறன்மிக்க உற்பத்தி செயற்பாடுகளில் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது.இவை முழுமையான உற்பத்தி முறையில் ஒருங்கிணைந்த வடிவமைப்பு மற்றும் திறமையான திட்டமிடலுடன் உடன்படுகின்றதுடன்,அதன் அதிநவீன உறபத்திமுறைகள் மற்றும் கட்டுப்பாட்டு முறைகளில் சிக்கல் அதிகரித்தவண்ணம் காணப்படுகின்றது.

உற்பத்தி பொறியியலாளர்[தொகு]

உற்பத்திப் பொறியியலாளர் பல்வேறுபட்ட திறமைகள்,ஆற்றல்கள்,விஞ்ஞான அறிவு மற்றும் சந்தை தொடர்பில் அணுகுமுறைகளை கொண்டவராக இருப்பார்.இவ்வாறான திறமைகள்,பல்வேறுபட்ட குழுக்களை தொழில்முறையில் ஒருங்கிணைத்து செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான அடிப்படையை வழங்கும்.[1] இவ்வாறான உற்பத்தி பொறியியலாளர்களுக்கு கட்டாயம் செய்யமுடியுமாக இருக்க வேண்டியவை:

  • அளவிடல் மற்றும் வளங்களை ஒருங்கிணைத்தல்
  • வடிவமைத்தல்,செயற்படுத்தல் மற்றும் பொருட்களை சுத்தப்படுத்தல், சேவைகள், செயல்முறை மற்றும் அமைப்புக்கள்
  • உற்பத்திக்கான கேள்வியை ஆய்வுசெய்தல்,கணித்தல்
  • தரமான நுட்பங்கள் மற்றும் கருத்துக்களை பதிவுசெய்தல்
  • அன்றாட தொழிநுட்பவளர்ச்சி தொடர்பான தகவல்களுடன் தொடர்பில் இருத்தல்.
  • உற்பத்தி அமைப்புகள் மற்றும் சூழலுக்கு இடையிலான தொடர்புகளை விளங்கிக்கொள்ளல்.
  • மேலாண்மை மற்றும் மேம்படுத்தப்பட்ட ஓட்டம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "O Engenheiro de Produção da UFSCar está apto a" (in Portuguese). Departamento de Engenharia de Produção (DEP). Archived from the original on 2012-08-25. பார்க்கப்பட்ட நாள் 2013-06-26. {{cite web}}: Unknown parameter |trans_title= ignored (help)CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=உற்பத்திப்_பொறியியல்&oldid=3545374" இலிருந்து மீள்விக்கப்பட்டது