சிதம்பராபுரம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சிதம்பராபுரம், திருநெல்வேலி மாவட்டத்தில், களக்காடு நகராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும். இக்கிராமம் களக்காடு நகராட்சியின் 23,24,25 வார்டுகளைக் கொண்டது. இந்த கிராமம் 12 ஆம் நூற்றாண்டில் சேதுராயர்கள் வாழ்ந்த பகுதி அதன் அடையாளமாக இப்போதும் சேதுராயபுரம் என்ற ஊர் அருகில் உள்ளது. இப்போதும் சேதுராய வம்சாவளியை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். சேதுராயர்கள் மார்த்தாண்ட வர்மாவின், படை தளபதியாகவும் போர் வீரர்களாகவும் இருந்தார்கள்.[சான்று தேவை]
மக்கள்
[தொகு]இக்கிராத்தில் பெரும்பான்மை மக்கள் நாடார் சமூகத்தைச் சார்ந்தவர்கள். இந்துக்களும், கிறித்தவர்களும் கலந்து வாழ்கின்றனர். பெரும்பான்மை மக்களின் தொழில் விவசாயம் ஆகும். வாழையும் நெல்லும் இங்கு பயிரிடப்படுகின்றன. கௌதம நதி இக்கிராமத்தின் வழியே பாய்கிறது. பெண்கள் வீட்டில் இருந்தபடியே பீடி சுற்றுதல் தொழிலில் ஈடுபடுகின்றனர்.
சமயம்
[தொகு]அய்யா வைகுண்டரின் “அய்யாவழி” வழிபாடு பெருவாரியாகக் காணப்படுகிறது. இங்குள்ள அய்யா வைகுண்டரின் நிழல்தாங்கல் வரலாற்றுப்பழைமை வாய்ந்தது. ஆனி மாதம் நடைபெறும் ஆனித்தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது.
கிறித்தவ சமயத்தைச் சார்ந்த மக்களும் குறிப்பிடத்தக்க அளவில் வாழ்கின்றனர். உரோமன் கத்தோலிக்க சபையைச் சார்ந்த புனித சவேரியார் ஆலயமும் தென்னிந்திய திருச்சபையைச் சார்ந்த தேவாலயமும் உள்ளன.
பள்ளிகள்
[தொகு]கிறித்தவ சிறுபான்மைப் பள்ளிகளான T.D.T.A.தொடக்கப்பள்ளியும், புனித சவேரியார் நடுநிலைப் பள்ளியும் உள்ளன. உயர்கல்விக்கு களக்காடு செல்கின்றனர் இங்குள்ள மாணவர்கள்.