அஞ்சல்தலையிட்ட கடித உறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு 2 சென்டாவொசு அஞ்சல்தலையிட்ட ஒரு கடித உறை. புடைப்புருவ கொலம்பசு அடஒயாள முத்திரையுடன் கூடியது. அத்துடன், 3c அஞ்சல்தலையும் ஒட்டப்பட்டுள்ளது. கியூபாவில் இருந்து நார்வேக்கு அனுப்பப்பட்டுள்ளது. ca. 1904

அஞ்சல்தலையிட்ட கடித உறை (Stamped envelope) என்பது, அஞ்சல் சேவைக்கான முன்கட்டணம் செலுத்தப்பட்டதைக் குறிக்கும், அச்சிட்ட அல்லது புடைப்புருவ அடையாள முத்திரைகளுடன் கூடிய கடித உறையாகும். இது ஒரு வகையான அஞ்சல் எழுதுபொருள் ஆகும்.[1][2][3]

சேகரிப்பு[தொகு]

முத்திரையிட்ட கடித உறை சேகரிப்போர், என்னென்ன உறைகள் வெளியிடப்பட்டன என்று அறிந்துகொள்வதற்கு விபரப்பட்டியல்களைப் பயன்படுத்துகின்றனர். சியெக்பிரைட் ஆச்சர் என்பவரே, எல்லா நாடுகளிலும் வெளியிடப்பட்ட அஞ்சல்தலையிட்ட கடித உறை உட்பட்ட அஞ்சல் எழுதுபொருட்களை முதன் முதலில் விரிவாக ஆவணப்படுத்த முயன்றவராவார். இதைத் தொடர்ந்து ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்குப் பின்னர் இக்கின்சு அன்ட் கேச்சு உலக அஞ்சல் எழுதுபொருள் விபரப்பட்டியல் வெளியானது. தற்போது காலங்கடந்த ஒன்றாகிவிட்டபோதும், இது இப்போதும் மேற்கோள் காட்டப்பட்டு வருகிறது. இதில் எல்லா நாட்டுத் தகவல்களும் இருப்பதும், இதற்குப் பின்னர் இது போன்ற விரிவான விபரப்பட்டியல் எதுவும் வெளிவராமையும் இதற்கு முக்கிய காரணங்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. The Sherborn Collection. British Library, 29 January 2012.
  2. # Mintz, Allen, Ed.; Catalog of the 19th Century Stamped Envelopes, Wrappers, Cut Squares and Full Corners of the United States; UPSS, 2001. இணையக் கணினி நூலக மையம் 50290906
  3. Undersander, Dan, Ed.; Catalog of the 20th and 21st Century Stamped Envelopes and Wrappers of the United States, Third Edition, UPSS, 2011. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9800112-8-9.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சல்தலையிட்ட_கடித_உறை&oldid=3752061" இலிருந்து மீள்விக்கப்பட்டது