கொல்லிப் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொல்லிப் போர் என்பது கொல்லிமலையில் நடந்த போராகும் இப்போர் ஓரிக்கும், காரிக்கும் நடந்தது இப்போரில் காரி சேரமான் சார்பாக போரிட்டதாக கருதப்படுகிறது. இப்போரில் வல்வில் ஓரியைக் கொன்று அந்த மலையை சேரமானுக்கு காரி வழங்கினான்.[1] ஓரி இறந்தபின்னும் கொல்லிமலையில் பெரும் போர் ஒன்று நடந்து என்பதை

கொல்லிக் கூற்றத்து நீர்கூர் மீமிசைப்
பல்வேல் தானை அதிகமானொடு
இருபெரு வேந்தரையும் உடனிலை வென்று
முரசும் குடையுங் கலனுங் கொண்டு
[2]

என்று பதிற்றுப்பத்து தெரிவிக்கிறது. இப்போரில் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையை எதிர்த்து அதியமான் நெடுமானஞ்சியும் இரு பெரும் வேந்தர்களாகிய சோழனும், பாண்டியனும் இணைந்து போரிட்டனர். பெருஞ்சேரல் இரும்பொறை இம்மூவரையும் வென்று அவர்தம் முரசு, குடை, கலன் ஆகியவற்றைக் கைப்பற்றினான். [3]

குறிப்பு[தொகு]

  1. குறுந்தொகை பாடல் எண்.20
  2. பதிற்றுப் பத்து பதிகம்.8
  3. சி.ஈ.இராமச்சந்திரன், தமிழ்நாட்டு வரலாறு சங்ககாலம் பக்.553
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொல்லிப்_போர்&oldid=2565480" இலிருந்து மீள்விக்கப்பட்டது