பச்பன் பச்சாவ் அந்தோலன்
Appearance
பச்பன் பச்சாவ் அந்தோலன் (Bachpan Bachao Andolan, இளமையைக் காப்பாற்று இயக்கம்) குழந்தைகள் நலனுக்காகப் போராடும் இந்தியாவை அடித்தளமாகக் கொண்ட இயக்கமாகும். இது 1980இல் கைலாசு சத்தியார்த்தியால் தொடங்கப்பட்டது. கொத்தடிமைக் கூலி, குழந்தைத் தொழிலாளர் மற்றும் மாந்தப் போக்குவரத்தை முடிவுக்கு கொண்டுவருவதும் அனைவருக்கும் கல்வியுரிமையை நிலைநிறுத்துவதும் இதன் குவியமாக உள்ளது. இந்த இயக்கத்தின் மூலமாக இதுவரை 80,000 சிறுவர்கள் வேலைகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்; விடுவிக்கப்பட்ட சிறுவர்களின் மீள்-இணைவு, மறுவாழ்வு, மற்றும் கல்விக்கு உதவியாக உள்ளது.[1]
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "Kailash Satyarthi: The activist who made child rights fashionable". IANS. news.biharprabha.com. 10 October 2014. http://news.biharprabha.com/2014/10/kailash-satyarthi-the-activist-who-made-child-rights-fashionable/. பார்த்த நாள்: 10 October 2014.