உள்ளடக்கத்துக்குச் செல்

ஒட்டுதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
'V' ஒட்டல் மூலம் ஒட்டப்பட்ட அப்பிள் மரம்

விவசாயத்தில் அதிக விளைச்சலைப் பெறுவதற்காக இரு தாவரத் தண்டுப்பகுதிகளை இணைத்து புதிய தாவரமாக வளர்க்கப்படுவதே ஒட்டுதல் எனப்படும். குறைவான விளைச்சலை உண்டாக்கும் தாவரத்தின் தண்டு வெட்டப்பட்டு அதனுடன் அதிக விளைச்சலைத் தரும் தாவரத்திலிருந்து எடுக்கப்பட்ட கிளை அல்லது அரும்பு ஒட்டப்படும்.[1][2][3]

சிறந்த வேர்த் தொகுதியைக் கொண்ட தாவரமே ஒட்டுக்கட்டையாகப் பயன்படும். அதன்மீது அரும்பு காணப்படும் தண்டு ஒட்டப்படும். இதன் போது இரு தாவரப் பகுதிகளினதும் காள், உரியம் இணைய ஒரு வாரத்திற்கு மேல் காலம் தேவைப்படும். மேலே ஒட்டப்படும் தாவரம் ஒட்டுக்கட்டையை விட அதிக விளைச்சலைத் தரும் போது மாத்திரமே இம்முறை பயனுள்ளதாக அமையும். இம்முறை சரியானதாக அமைய இரு பகுதிகளின் கேம்பியப் பகுதிகள் இணைந்திருக்க வேண்டும். இரு பகுதிகளும் ஒரே இனம் அல்லது சாதியைச் சேர்ந்திருத்தல் அவசியமானதாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Hottes, A.C. (1925). Practical plant propagation: an exposition of the art and science of increasing plants as practiced by the nurseryman, florist and gardener. New York: A.T. De La Mare.
  2. Melnyk, Charles W.; Schuster, Christoph; Leyser, Ottoline; Meyerowitz, Elliot M. (May 2015). "A Developmental Framework for Graft Formation and Vascular Reconnection in Arabidopsis thaliana". Current Biology 25 (10): 1306–1318. doi:10.1016/j.cub.2015.03.032. பப்மெட்:25891401. Bibcode: 2015CBio...25.1306M. 
  3. Kumar, G. (2011). "Propagation of Plants by Grafting and Budding" (PDF). Pacific Northwest Extension. pp. 3–5.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒட்டுதல்&oldid=4164828" இலிருந்து மீள்விக்கப்பட்டது