பொன் மலர் (புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொன் மலர்
பொன் மலர்
நூலாசிரியர்அகிலன்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வகைசமுதாயப் புதினம்
வெளியீட்டாளர்தாகம் பதிப்பகம்[1], தமிழ்ப் புத்தகாலயம் [2]

பொன் மலர் எழுத்தாளர் அகிலன் உருவாக்கிய புதினங்களுள் ஒன்று. அகிலன் பல புதினங்களைப் படைத்திருந்தாலும், அவரது சமுதாயப் புதினங்களுள், பொன்மலர் ஒரு சிறந்த இடத்தைப் பெற்றுள்ளது. ராணிமுத்து இதழின் முதல் புதினமாக வெளிவந்து பல இலட்சம் பிரதிகள் விற்பனையானது. ரஷ்ய, சீன, ஆங்கில மொழிகளிலும் இந்தியாவின் பெரும்பாலான மாநில மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு புத்தகவடிவில் வெளியான புதினம். பல கல்லூரிகளில் பாடப் புத்தகமாகத் திகழ்ந்த இப்புதினம் வானொலி நாடக வடிவிலும் ஒலி பரப்பான பெருமை பெற்றது.[3]

கதைச் சுருக்கம்[தொகு]

கள்ளப் பணம் இச்சமூகத்தைச் சூறையாடுவதையும் அதன் விளைவாக நிகழும் இக்காலச் சமுதாய வாழ்வின் ஒழுக்கக் கேடுகளையும் எதிர்த்து பெரும் துணிச்சலுடன் போராடி அவற்றை நீக்க முயலும் மருத்துவர் சங்கரியும், மத்திய அரசின் பொருளாதாரக் குற்றத் தடுப்பு அதிகாரியான திருஞானமும் பெரும் புதிராய் வாழும் வாழ்க்கையை மிகச் சுவையாகக் கூறும் புதினம்.பெண்மையின் மேன்மை, பெண்ணின் (சீரழியும்) நிலை குறித்த படைப்பாளரின் பரிவுணர்ச்சி, சமுதாயத்தில் பணக்காரர்களின் நிலை, பொருளாதாரச் சீரழிவு, கருப்புப் பணம், இலஞ்சம், கலப்படம் போன்ற இவற்றை உள்ளடக்கிய கதைக்கருவை இப்புதினம் கொண்டுள்ளது. அகிலனின் இந்தப் புதினம் சமுதாயத்தில் காணப்படும் சீரழிவுகளைத் தோலுரித்துக் காட்டும் எதார்த்தப் போக்கினைக் கதைக் கருவாகக் கொண்டது.[4]

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. [1]
  2. [2][தொடர்பிழந்த இணைப்பு]
  3. எழுத்தாளர்அகிலன் எழுதித் தமிழ்ப் புத்தகாலயம் வெளியிட்ட பொன் மலர் புத்தகத்தில் கி. வா. ஜெகந்நாதன் அவர்களின் சிறப்புரை
  4. "அகிலனின் புதினம் - பொன்மலர்". முனைவர் ஆர்,தமிழ்ச் செல்வி. பார்க்கப்பட்ட நாள் 02 டிசம்பர் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்_மலர்_(புதினம்)&oldid=3577932" இலிருந்து மீள்விக்கப்பட்டது