பயனர்:Premloganathan/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போயர்
வகைப்பாடுO B C
மதங்கள்இந்து
மொழிகள்தற்பொழுது இவர்களின் பிரதான மொழி தெலுங்கு மற்றும் அனைத்து இந்திய மொழிகளும்
நாடுஇந்தியா

போயர் அல்லது போய நாயுடு என அழைக்கபடுவது இந்தியாவில் உள்ள ஒரு சாதிப் பிரிவாகும்.1909 இல், சென்னை மாகாணத்திற்காக மக்கள் தொகை கணக்குகளை ஆய்வு செய்த எட்கர் துர்ச்டன், அரசுக்கு சமர்ப்பித்த அறிக்கையில், நாயுடு அடைமொழி பயன்படுத்திய சாதிகள் பலிஜா, பேஸ்த, போயர், எக்காரி, கவரா, கொல்ல, கலிங்கி, காப்பு, முத்துராஜா மற்றும் வேலம ஆகியனவாகும் எனக் கூறியுள்ளார். மேலும் துர்ஸ்டன் நாயுடு தமிழில் நாயக்கர் அல்லது நாயக்கன் என்றழைக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.[1]

போயர் (Boyar) என்றழைக்கப்படும் (Bedar) வேட்டுவ சாதி மக்கள்[தொகு]

இராமாயணம் ஒரு நாயகன்(Nayaka) = கிராத் (Kirat) = போய (Boya) = வேடர் (vedar) = பேட (Beda) சமூகத்தில் பிறந்த முனிவர் வால்மீகியால் எழுதப்பட்டது.

போயர்களின் சாதிய பெயர்கள் பின்வருமாறு அழைக்கப்படும்:-

வேடன் = வேடர் = கண்ணப்ப குல மக்கள், பேட அல்லது போய = போயர் = பேடர் = வால்மீகி. [2][3]

கருநாடகாவில் பேடர் என்றும் வால்மீகி நாயக்கா என்றும் அழைப்பர் மேலும் தென் இந்தியாவில் போய டோரா எனும் வார்த்தை மருவி போயடுறு ஆக உருமாறி இறுதியில் போய எனும் சொல் வேடர்களை குறிக்க நிலைத்துவிட்டது.

போயர்கள், நாய்டு அல்லது நாயுடு, நாயக், டோரா (ராஜா) , டோரா பிட்டா (ராஜபுத்திரர்கள்) மற்றும் வால்மீகி என்று அழைக்கபடுவர். இதை Edgar Thurston அவர்கள் சென்னை மாகாணத்திற்கான மக்கள் துகை கணக்கெடுப்பின் பொழுது அரசுக்கு அறிக்கை அளித்த பொழுது பின்வருமாறு கூறியுள்ளார். The titles of the Boyas are said to be Naidu or Nayudu, Naik, Dora, Dorabidda (children of chieftains), and Valmiki.[4]

போய அல்லது போயர்கள் எனும் சொல் உயர்ந்த ராஜவம்சத்தை குறிக்கும் சொல்லாக கருதப்பட்டுவந்தது.

வரலாறு[தொகு]

திராவிட வம்சாவளியினரான போயர்கள் இந்திய பள்ளத்தாக்குகள் வழியாக இந்திய வந்தனர். போயர்கள் மிகவும் பழைமை வாய்ந்த சாதியினராவர். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுகளில் இந்தோ-ஆரிய பகுதிகளிலிருந்து இந்தியாவிற்கு புலம் பெயர்ந்தவர்களாவர். பிறகு ஒன்பதாம் நூற்றாண்டுகளில் துருக்கி, அயர்லாந்து, மற்றும் ரோமனியாவிற்கு புலம்பெயர்தனர். போயர்கள் ஆந்திராவிற்கு கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுகளில் ஒரிசா வழியாக இந்தோ-ஆரிய பகுதிகளிலிருந்து வந்தவர்களாவர். இவர்கள் ஹிந்து மதத்தினை சார்ந்தவர்கள் மற்றும் தெலுங்கை தாய் மொழியாய் கொண்ட இவர்கள் தற்பொழுது இவர்கள் தென் இந்தியாவில் அதிகமாக வசித்து வருகின்றனர். போயர்கள் சத்திரியர்கள் கி. பி. பத்தாம் நூற்றாண்டு முதல் கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டுவரை சாளுக்ய, சோழ, விஜயநகர மற்றும் ஹோய்சால மன்னர்களின் சாம்ராஜ்யத்தில் பணிபுரிந்தவர்களாவர்.

ஆந்திரப்பிரதேச கக்காட்டிய பேரரசில் போய மற்றும் கம்மா சத்திரியர்கள் முசுருனி நாயக்கர்களாக அரசாட்சி புரிந்துவந்தனர். தில்லி சுல்தான்களின் இருந்து 1326 - ஆம் ஆண்டில் மீட்கபட்டபின்னர் கிங் பிரதாப ருத்ரா அவர்களின் அரசவையில் எழுபத்தைந்து நாயக்கர்களாக போயர், வேலாம, கம்மா, ரெட்டி, தெலுகா, மற்றும் பலிஜா போன்ற வேளாண்மை சார்ந்த சாதிகளுக்கும் நாயக்கர்களாக இருந்து ஆட்சிபுரிந்தனர். பின்னர் 17 - ஆம் நூற்றாண்டில், நாயக்கர்களின் பரஸ்பர பொறாமை மற்றும் போட்டி பிரிந்திருக்க அவசிமாயிற்று, ஆகையால் போயர்கள் (Boyars /Bedars), பின்வரும் தொழில்களை செய்து தங்களை பொருளாதார சூழல்களுக்கு தக்கவாறு மாற்றிகொண்டனர். அத்தொழில்கள் பின்வருமாறு:- கொல்லர்கள், சிற்பிகள், மேன்மக்கள், தலைவர்கள், துறவிகள் , நில உரிமையாளர்கள், கோவில் சிற்பிகள், கை வர்த்தகர்கள், மற்றும் கடல் வழி தொழில்கள் செய்பவர்கள் என தங்களை வேறுபடுத்தி பல்வேறு பிரிவுகளாக பிரிந்தனர்.[5]

கர்நாடக வரலாற்றில், வேட (போய) இன மக்களை வால்மீகி மக்கள் நாயகன், பேட, தலைவர என அழைக்கப்பட்டனர். சித்ரதுர்கா, சுர்பூர், கேளடி, போன்ற இடங்களை கர்நாடகா வால்மீகி சமுகத்தை சேர்தவர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்ததை வரலாற்று சுவடுகளின் மூலம் இன்றும் காணலாம். இந்த மக்கள், வால்மீகி (Valmikis) என்றும் அழைக்கப்டுகின்றனர், பேட (போய / அதாவது ஹண்டர்ஸ்), தளவர் (அதாவது பூர்வீக குடிகள்) கடந்த காலங்களில் நாயக்கர் சமூகமாக இருந்து சிறந்த ஆட்சி நிர்வாகத்தினை அளித்துள்ளது சிறப்பான ஒன்றாகும், தற்போது பேட (போய) மற்றும் தளவர் சமூகங்கள் நாயக்கர்களின் அடையாளங்களாக உள்ளன.

விஜயநகர பேரரசு (கி.பி.1300), Chitradurga பகுதியில் "Nayakas" என்று சிற்றரசர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்துள்ளது. போய தளபதி Timmanna நாயகன் திறமைகளை பாராட்டி அவரின் சாதனைகளுக்காக தனது சிறந்த பரிசாக விஜயநகர பேரரசின் கீழ் இருந்த சித்ரதுர்கா அரசட்சியினை போய திம்மன்ன நாயக்கருக்கு அளிக்கப்பட்டது. அதன்பின் சித்ரதுர்கா கோட்டை கி.பி.1562-ஆம் ஆண்டு முதல் 1565-ஆம் ஆண்டு வரை கட்டப்பட்டது, விஜயநகர நகரம் வீழ்ச்சிக்கு பிறகு, தங்கள் சுதந்திரத்தை போய நாயக்கர்கள் பிரகடனம் செய்தனர். சித்ரதுர்கா போய குடும்பம் மற்றும் பெரும்பாலான மற்ற மைய கர்நாடகா நாயக்கர்களின் எச்சங்களை தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தனர். பின்னாட்களில் சித்ரதுர்கா போயர்களின் தலைநகரானது, கி.பி. பதினேழாம் நூற்றாண்டிலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டு இறுதிவரை ஆட்சிபுரிந்து வந்தனர். இறுதியாக 1799-ஆம் ஆண்டில் ஹைதர் அலி வசமானது, பின் நாட்களில் பிரிட்டிஷாரின் சாம்ராஜ்யத்தில் இணைக்கப்பட்டுவிட்டது.[6][7]

சித்ரதுர்கா அரச குடும்பமானது வேடர்கள் எனும் போய நாயக்கர்களின் வம்சமாகும். இவ்வேட குடும்பம் இராமாயணம் எழுதிய கிராத் (Kirat ) வம்சாவளியான வால்மீகி குலத்தினை சார்ந்தவர்களாவர். நாயக் (Nayak) எனும் பெயர், மலைமீது வேட்டையாடும் போயர் எனும் வேடர்களின் பரம்பரை பட்டமாகும்,[8]மேலும் ஓடும் நீரில் மீன்களை வேட்டையாடும் இனமான வால்மீகி மக்கள் என அழைக்கப்படும் போய பாளையக்காரர்கள் முத்துராஜா எனப்படும் ராஜூ நாயக்கரின் ஒரு பிரிவே ஆகும். முடிராஜ் இனத்தை முத்தராசி , தேனுகோல்லு, முத்துராசன், முத்திராஜுலு, நாயக், பாண்டு, தெலுகுடு, தெலுகா, தலாரி, கோழி என்று அந்திரப் பிரதேசதிலும், கங்கவார்,கங்கமதா,பேஸ்த, போய, கபீர், காபல்கார், கங்கைபுத்திரர், மற்றும் கோழி என்றும் கருநாடகத்தில் அழைப்பர். மேலும் இம்மக்களை தமிழகத்தில் முத்திராயர் மற்றும் முத்திராயன் என்றும் அழைப்பர்.[9] இன்றைய ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளையும், முழுமையான கருநாடகப் பகுதிகளையும் தமிழ்நாட்டின் ஒருசில பகுதிகளையும் போய நாயக்கர்கள் பாளையங்களாக பிரித்து அரசாண்டது வரலாற்றுச்சுவடுகள் மூலம் புலனாகின்றது.[10][11]

போய மக்கள் பூர்வீக குடிகள் என்று ராஜஸ்தான் மாநில பாலி மாவட்டத்தில் உள்ள போய கிராம வரலாற்றுச்சுவடுகள் கூறுகின்றன, மேலும் அவர்கள் மேல்குடிமக்களான ராஜபுத்திரர்கள் என்றும் கூறுகின்றன.[12]

குறிப்பிடத்தக்க போய நாயக்கர்கள்[தொகு]

கண்ணப்ப நாயனார் எனும் போய தின்னடு ஒரு வேட குடும்பத்தில் பிறந்தார். அந்த இடம், கோவில் நகரமாம் திரு கலகஸ்தியில் (ஆந்திர பிரதேசம்) உள்ளது. அவர் ஸ்ரீ காளஹஸ்தியில் உள்ள ஸ்ரீபுரம் மற்றும் மும்மிடி சோழபுரம் மலைப்பாங்கான வனபகுதியில் வேட்டையாடுவதை தொழிலாக கொண்டிருந்தவர். இவர் சிவபுராணத்தில் சிறந்த சிவனடியாராக விளங்கியவர், மேலும் அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவராக அறியப்பட்டவர், இறைவன் சிவபிரானுக்கே தனது கண்களையே அம்பால் கொய்து சிவபிரானுக்கு அளித்தவர், அதனால் சிவபிரானின் அன்பிற்கு பத்திரறாகி பெரும்பேறு பெற்றவரானார்.[13][14][15]

Kannappa stopped by Shiva as he tries to remove his second eye.










போய நாயக்கர்களின் கோவில்கள்[தொகு]

ஸ்ரீ போய கங்கம்மா கோவில்[தொகு]

பல நூற்றாண்டுகளாக பழங்குடியினரான போயர்கள் (போயாஸ்) மற்றும் யாழிகாஸ் (எளிகஸ்) ஒரு சிறுகுன்றினைச் சுற்றி காட்டுப் பகுதியில் வசித்து வந்தார்கள். அந்த பகுதிகளில் நவாப்புகளின் அடக்குமுறை மீது சீற்றம் கொண்டிருந்தனர். ஒரு நல்ல சந்தர்பத்தில் போய பழங்குடிகள் நவாப்பின் வீரர்களை அந்த சாம்ராஜ்யத்திலிருந்து விரட்டி அடித்தனர், அது அந்த மலையில் இருந்த அம்மன் ஸ்ரீ சக்தி தேவியின் கருணையால் என நினைத்து இன்றளவும் ஸ்ரீ சக்தி தேவியினை போய மலை கங்கம்மா என அழைத்து வழிபட்டு வருகின்றனர், இந்த ஸ்தலம் திருப்பதி மலையருகில் சில கிலோமீட்டர் துரத்தில் உள்ளது. வருடத்திற்கு ஒருமுறை வரும் நவராத்திரி காலங்களில் திருவிழா எடுப்பர், அந்த சமயத்தில் இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் ஸ்ரீ கங்கம்மா தேவியினை தரிசிக்க வருகை புரிவர், இக்கோவில் 1990 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேச அறக்கட்டளை துறையினரால் எடுத்துக்கொள்ளப்பட்டது.[16]

ஆந்திரப்ப்ரதேசதில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் கடவகல்லு புத்தூர் மண்டல் எனும் ஊரில் சென்னகேசவ கோவில் போய பாலயக்கரர்கலான (Palegar / Palayakarar = Local Kings ) மேசா திம்மன்ன நாயுடு அவர்களால் 16 - ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது, தற்பொழுது ஆந்திரபிரதேச அரசால் பராமரிக்கப்பட்டு வருகின்றது.[17]

கோவில்களில் போய நாயக்கர்களின் பங்கு அளவிடமுடியாதது, கோவில்களுக்கான அதிகமான திருப்பணிகளை செய்துவந்துள்ளது வரலற்றுச்சுவடுகளின் மூலமாக அறியமுடிகின்றது.[18]

இன்றைய நிலை[தொகு]

போயர்களை மத்திய அரசு OBC பட்டியலிலும், ஆந்திரப்பிரதேசத்தில் பின்தங்கிய சமூக வகுபினராக A பட்டியலில் அறிவித்துள்ளனர், மற்றும் தமிழகத்தில் போயர்கள் (Boya, Boyas, Boyer / Boyar) எனக்குறிப்பிட்டு பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்ட பட்டியலில் வைத்துள்ளனர். [19] [20] [21]

மேற்கோள்கள்[தொகு]

  1. Thurston, Edgar; Rangachari, K. (1909). Castes and Tribes of Southern India. V (M to P). Madras: Government Press. பக். 138. http://www.archive.org/details/castestribesofso05thuriala. பார்த்த நாள்: 2012-03-24. 
  2. "Valmiki Research Centre". Valmiki Research Kendra, Sangrur (Pb.): Valmiki Research India. 2011. p. 1. பார்க்கப்பட்ட நாள் 2012-10-12. {{cite web}}: |first1= missing |last1= (help); |first2= missing |last2= (help)
  3. "Medieval Indian culture and political geography". New Delhi: Ashish Publishing House. 1991. p. 86. பார்க்கப்பட்ட நாள் 2012-10-12. {{cite web}}: |first1= missing |last1= (help); |first2= missing |last2= (help); line feed character in |location= at position 5 (help)
  4. Thurston, Edgar; Rangachari, K. (1909). Castes and Tribes of Southern India. I (A to B). Madras: Government Press. பக். 187. http://archive.org/details/castestribesofso01thuriala. பார்த்த நாள்: 2012-10-11. 
  5. "Boya of India" (PDF). PO Box38301, Colorado Springs, CO 80937: Accelerating International Mission Strategies. 2012. p. pdf. பார்க்கப்பட்ட நாள் 2012-10-15. {{cite web}}: |first1= missing |last1= (help); |first2= missing |last2= (help)CS1 maint: location (link) CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link)
  6. "Valmiki Research Centre". Valmiki Research Kendra, Sangrur (Pb.): Valmiki Research India. 2011. p. 1. பார்க்கப்பட்ட நாள் 2012-10-12. {{cite web}}: |first1= missing |last1= (help); |first2= missing |last2= (help)
  7. Lewis, Barry; Patil, C.S. (2010). " Chitradurga: A Nayaka Period Successor State in South India" (PDF). Urbana, IL 61801: Barry Lewis & C.S.Patil. p. 1. பார்க்கப்பட்ட நாள் 2012-10-12. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)CS1 maint: location (link)
  8. Wilson Hunter, William (1885). The imperial gazetteer of India - Contributor: University of Massachusetts, Boston. 3. London: Trübner & co.. பக். 50-56. http://www.ebooksread.com/authors-eng/william-wilson-hunter/the-imperial-gazetteer-of-india-volume-3-tnu/page-51-the-imperial-gazetteer-of-india-volume-3-tnu.shtml. பார்த்த நாள்: 2012-10-17. 
  9. – CHANGE OF GROUP FROM ‘D’ TO GROUP ‘A’ IN THE LIST of B.C.s, MUDIRAJ, MUTRASI, TENUGOLLU CASTE (1994). Castes and Tribes of Southern India. pdf. Andhra Pradesh: Government Press. பக். 1. http://www.aponline.gov.in/APPORTAL/Departments/BC%20Welfare%20Reports/PDFS/2009/MUDIRAJ%20CASTE.pdf. பார்த்த நாள்: 2012-10-10. 
  10. "SURNAMES OF MUDIRAJA / MUTHURAJA COMMUNITY IN SOUTH INDIA". Maharastr,India. 2008. p. 1. பார்க்கப்பட்ட நாள் 2012-10-12. {{cite web}}: |first1= missing |last1= (help); |first2= missing |last2= (help)
  11. "Valmiki Research Centre". Valmiki Research Kendra, Sangrur (Pb.): Valmiki Research India. 2011. p. 1. பார்க்கப்பட்ட நாள் 2012-10-12. {{cite web}}: |first1= missing |last1= (help); |first2= missing |last2= (help)
  12. "Boya village,Pali District, Rajastan". Rajasthan: wikiedit.org. 2011. p. html. பார்க்கப்பட்ட நாள் 2012-10-12. {{cite web}}: |first1= missing |last1= (help); |first2= missing |last2= (help)
  13. "THE GREAT WARRIOR TRIBES OF MUDIRAJA - MUTHURAJA". Maharastr,India. 2008. p. 1. பார்க்கப்பட்ட நாள் 2012-10-12. {{cite web}}: |first1= missing |last1= (help); |first2= missing |last2= (help)
  14. "Kannappa Nayanar". USA. 2012. p. 1. பார்க்கப்பட்ட நாள் 2012-10-12. {{cite web}}: |first1= missing |last1= (help); |first2= missing |last2= (help)
  15. "kaNNappa nAyanAr". USA. 2012. p. 1. பார்க்கப்பட்ட நாள் 2012-10-12. {{cite web}}: |first1= missing |last1= (help); |first2= missing |last2= (help)
  16. "Sri Boya Konda Gangamma Temple". India. 2012. p. 1. பார்க்கப்பட்ட நாள் 2012-10-12. {{cite web}}: |first1= missing |last1= (help); |first2= missing |last2= (help)
  17. "Chenakesava temple,Kadavakallu puthur mandal, Anandpur, AP." (PDF). India. 2012. p. pdf. பார்க்கப்பட்ட நாள் 2012-10-15. {{cite web}}: |first1= missing |last1= (help); |first2= missing |last2= (help)
  18. "South Indian Inscriptions". India. 2007. p. 1. பார்க்கப்பட்ட நாள் 2012-10-12. {{cite web}}: |first1= missing |last1= (help); |first2= missing |last2= (help)
  19. ANDHRA PRADESH LIST OF SOCIALLY AND EDUCATIONALLY BACKWARD CLASSES, BACKWARD COMMUNITIES GROUP-A (2009). Castes and Tribes of Southern India. html. Andhra Pradesh: Government Press. பக். 1. http://www.aponline.gov.in/apportal/departments/departments.asp?dep=03&org=111. பார்த்த நாள்: 2012-10-10. 
  20. ANDHRA PRADESH LIST OF SOCIALLY AND EDUCATIONALLY BACKWARD CLASSES, OBC. CENTRAL LIST OF OBCs FOR THE STATE OF ANDHRA PRADESH. pdf. Andhra Pradesh: Government Press. பக். 2. http://www.ncbc.nic.in/Pdf/andhrapradesh.pdf. பார்த்த நாள்: 2012-10-10. 
  21. MBC CLASSES, BC. TAMILNADU STATE BC LIST. html. Tamil Nadu: Government Press. பக். 1. http://www.tn.gov.in/bcmbcmw/bclist.htm. பார்த்த நாள்: 2012-10-10. 

குறிப்புகள்[தொகு]

  1. Edgar; Rangachari, K. (1909). Castes and Tribes of Southern India. I to VII Volumes. Madras: Government Press. Retrieved 2012-09-27.
  2. Chitradurga: Spatial Patterns ofa Nayaka Period Successor State in South India, by BARRY LEWIS AND C. S. PATIL.accessdate=2012-10-16
  3. 'The Mysore Kingdom at AD 1800: ARCHAEOLOGICAL APPLICATIONS OF THE MYSORE SURVEY OF COLIN MACKEINE, By Barry Lewis,accessdate=2012-10-16
  4. Sir Athelstane Baines & W.Siegling (1912) ETHNOGRAPHY- (Castes and Tribes),volume=II (Part-5), page=68,69,73,82 & 148,location=Canada,publisher=University of Toronto,accessdate=2012-10-16
  5. Farming Class and the Fragmented Polity: A Study of Yalahanka Nada Prabhus of Karnataka., by Dr.Shadaksharaiah, Professor of History, Bangalore University, Bangalore 560056. accessdate=2012-10-16
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Premloganathan/மணல்தொட்டி&oldid=3706469" இலிருந்து மீள்விக்கப்பட்டது