பேச்சு:மா சே துங்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மா சே துங் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ள ஒலிக்கோப்பை பல முறை கேட்ட பிறகே தற்பொழுது உள்ள கட்டுரைத் தலைப்பை இறுதி செய்துள்ளேன். எனினும், பிற தமிழ் ஊடகங்களில் உள்ள எழுத்துக்கூட்டல் முறைகளையும் கட்டுரையில் சுட்டலாம்.--ரவி 15:23, 29 ஆகஸ்ட் 2006 (UTC)

மா சே துங் என்னும் பெயரில் ஒரு கட்டுரை ஏற்கனவே இருக்கிறது. ஆனால் நானறிந்தவரை மாவோ சேதுங் என்பது பரவலான புழக்கத்தில் உள்ளது. மிகவும் முக்கியமான ஒருவர் என்ற வகையில் இவர் பற்றிய நூல்கள் மற்றும் இவரது எழுத்துக்களின் மொழிபெயர்ப்புக்கள் பல வெளிவந்துள்ளன என நினைக்கிறேன். ஆதலால் ஒலிப்பெயர்ப்பை விடவும் இவரது பெயர் பரவலாக எப்படித் தமிழில் எழுதப்படுகிறது என்பதைப் பின்பற்றுவது நன்று. --கோபி 15:43, 29 ஆகஸ்ட் 2006 (UTC)

கூகுளில் தேடியதில்

  • மா சே துங் - 137 பக்கங்கள்
  • மாவோ சேதுங் - 20 பக்கங்கள்

கிடைத்தன. --சிவகுமார் 15:48, 29 ஆகஸ்ட் 2006 (UTC)

எந்தத் தலைப்பில் கட்டுரையை இறுதி செய்தாலும் எனக்கு உடன்பாடே. ஏற்கனவே உள்ள கட்டுரையை விட தற்பொழுது உள்ள கட்டுரையில் உள்ளடக்கம் அதிகம். தகுந்த பக்கத்திற்கு படியெடுக்க வேண்டும். சிவா, கூகுளில் தேடுவதை விட தமிழ் அச்சு ஊடகங்களில் இவர் பெயர் அதிகம் வந்திருக்கும். அதையும் அறிய வேண்டும். (சீன வானொலியிலும் பார்க்கலாம்.)மயூரன் உதவலாம். 100 கோடிக்கும் மேற்பட்ட சீன மக்கள் வணங்கும் தலைவர். அவசியம் விரிவாக்கப்பட வேண்டிய கட்டுரை.--ரவி 15:54, 29 ஆகஸ்ட் 2006 (UTC)

சிவா, நூலகத்தில் தேடியதில் மா சேதுங் , மாவோ சேதுங் இரண்டும் பயன்படுவதைக் கண்டேன். ஆதலால் மா சே துங் என்றே பயன்படுத்தலாம். கோபி 16:31, 29 ஆகஸ்ட் 2006 (UTC)

மாவோ சேதுங் வழி மாற்று கொடுத்துவிடலாம். --சிவகுமார் 16:51, 29 ஆகஸ்ட் 2006 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மா_சே_துங்&oldid=2828436" இலிருந்து மீள்விக்கப்பட்டது