பேச்சு:தமிழ்ச் சமூகத்தில் கொத்தடிமைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தகுந்த ஆதாரங்கள், துணை நூலகள் இல்லாமல் இணையத்தில் இருக்கும் தகவல்களும், நான் கேள்விப்பட்ட விடயங்களையும் மையமாக வைத்து பதிப் பட்ட பதிவு. யாருக்கும் ஆட்சோபனை இருக்குமானால், இங்கு தெரிவியுங்கள். --Natkeeran 20:15, 16 டிசம்பர் 2005 (UTC)

தமிழ் சமூகத்தில் மட்டும் கொத்தடிமை முறை இருப்பதை போன்றும், தொடங்கப்பட்டது போன்ற சித்திரத்தை கட்டுரை தருகிறது. இது தவறு. இன்று உலகெங்கும் பல சமூகங்களில் இருக்கிறது. உடல் வலிமை தேவைப்படும் வேலைகளை மட்டும் செய்வதில்லை கொத்தடிமைகள். வட இந்தியாவில் மிட்டாய் தயாரிக்கும் பணியில் கூட கொத்தடிமைகள் ஈடுபடுத்துகிறார்கள். அவர்கள் பொதுவாக தப்பித்து போகும் வாய்ப்பு இன்றி முதலாளிகளின் வலுவான கண்காணிப்பில் இருப்பார்கள். அதனால், அவர்கள் சேரிகளில் பொதுவாக வசிப்பார்கள் என்ற கூற்று சரியன்று. பெரும்பாலோனார் ஆயுள் முழுமைக்கான சம்பளத்திற்கு விற்கப்படுகிறார்கள். அல்லது வாங்கிய கடனுக்கு வாழ்க்கை முழுதும் உழைக்கிறார்கள். கொத்தடிமை முறையின் தோற்றம், செயற்பாடுகள், கடினத் தன்மை ஆகியவற்றில் பல அம்சங்கள், நிலைகள் உள்ளன. அவற்றை கட்டுரை பிரதிபலிப்பது அவசியம். குறைந்த பட்சம் தமிழ்ச் சூழலுக்கு மட்டும் தொடர்பு படுத்தி எழுதியதை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் கட்டுரையின் நடுநிலை கேள்விக்குறியது. கொத்தடிமை என்ற வார்த்தை தமிழ் மொழியில் பல சூழல்களில் loose term ஆகப் பயன்படுத்துகிறது. அதையும் தாண்டி கொத்தடிமை முறைக்கு ஒரு முறையான வரையறையை கட்டுரை தர வேண்டும்--ரவி 14:04, 17 டிசம்பர் 2005 (UTC)

ரவி, நீங்கள் சொல்வது புரிகின்றது.
அடிமைகள் என்ற சொல்லை பொதுவாகவும், கொத்தடிமை என்பதை தமிழ் சூழலுக்கும் பயன்படுத்தலாம் என்று எண்ணினேன். ஏன் என்றால் தமிழ் சூழலின் கொத்தடிமை முறைகள் சற்று வேறுபட்டவை, குறிப்பாக அவை வெளிப்படையாக அடிமை நிலை போலற்றவை. ஆனால், உங்கள் கருத்து சரியென்றும் படுகின்றது. --Natkeeran 20:33, 17 டிசம்பர் 2005 (UTC)

இதில் முதற்பத்தி தவிர்த்து பொதுவியல் வழக்கில் அடிமை பற்றிய செய்தியே உள்ளது. முதற்பத்தி தவிர்த்து மற்ரவற்றை நீக்கிவிடலாம் என நினைக்கிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:35, 18 சனவரி 2013 (UTC)[பதிலளி]