பேச்சு:எல்லைப்புள்ளி (கணிதம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • Calculus என்பதற்கு நுண்கணிதம் என்றும், differential calculus என்பதற்கு வகை நுண்கணிதம் என்றும், integral calculus என்பதற்கு தொகை நுண்கணிதம் என்றும் நெடுநாளாக ஆளப்பட்டு வந்துள்ளது (அ.கி. மூர்த்தியின் அறிவியல் அகராதியிலும் இச்சொற்களே குறிபிடப்பட்டுள்ளன.). கட்டுரையில் மாற்றுவது பொருந்தும் என நினைக்கிறேன்.
  • எல்லை என்பது limit என்பதற்குப் பொருந்தும் என்றாலும், இங்கே கணிதத்துறைக்கு, அடைவு எல்லை என்றோ, அடைவு அத்தம் என்றோ கூறுவது பொருந்துமா என எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன். சுருக்கத்தை நான் மிகவும் விரும்புபவன். காலப்போக்கில் தேர்ந்த ஒரு சொல் துல்லியமான பொருளை ஏற்கும் என்றும் நம்புபவன். எனவே எல்லை என்பதை நான் வரவேற்கிறேன். எண்ணிப்பார்ப்பதில் தவறில்லை (கருத்து வளர்ச்சி அடையும் அல்லது கருத்துத் துல்லியம் ஏறும்) என்று கருதி முன்வைக்கின்றேன். மாற்றவேண்டும் என்று பரிந்துரைக்க வில்லை. --செல்வா 22:31, 22 ஏப்ரல் 2007 (UTC)