தமிழ் நூல் விபர அட்டவணை (1867 - 1957)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் நூல் விபர அட்டவணை என்பது 1867 இருந்து 1957 வரையான காலப் பகுதியில் வெளிவந்த தமிழ் நூல்பட்டியலை திரட்டுவதற்காக தமிழ்நாட்டு அரசின் தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட திட்டம் ஆகும். இந்தத் திட்டம் 1960 செப்டம்பரில் தொடங்கப்பட்டது. அ.ச.ஞான-சம்பந்தன், புலவர் மு.சண்முகம்பிள்ளை போன்ற தமிழ் அறிஞர்களால் இது முன்னெடுக்கப்பட்டது. 1987 வரையில் இந்த திட்டத்தின் வழியாக 1935 வரையில் வெளியான தமிழ் நூல்கள் பற்றி ஏழு தொகுதி நூற் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

வெளியீடுகள்[தொகு]

  • முதல் தொகுதி - (1867-1900) காலப் பகுதியில் வெளியான, ஆவணக் களரி நூலகத்தில் உள்ள நூல்கள்
  • இரண்டாம் தொகுதி - (1867-1900) காலப் பகுதியில் வெளியான, ஆவணக் களரி நூலகத்தில் இல்லாத நூல்கள்
  • மூன்றாம் தொகுதி - (1911-1915)
  • நான்காம் தொகுதி - (1916-1920)
  • ஐந்தாம் தொகுதி - (1921-1925)
  • ஆறாம் தொகுதி - (1926-1930)
  • ஏழாம் தொகுதி - (1931-1935)

வெளி இணைப்புகள்[தொகு]