முயன்று தெரிதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முயன்று தெரிதல் (trial and error) அறிவைக் கற்க, சிக்கல் தீர்க்க ஒரு அடிப்படை வழி. அன்றாட வாழ்வியலில் இருந்து உயர் தொழில்நுட்பம் வரை முயன்று தெரிதல் பய்ன்படுகின்றது.

கணித எடுத்துக்காட்டு[தொகு]

எடுத்துக்காட்டாக மூன்று தனி பொருட்களை (அ, ஆ, இ) எத்தனை வழிகளில் வரிசைமாற்றம் செய்யலாம் என்பதை முயன்று தெரிதல் வழியாக செய்ய எல்லா வரிசைகளையும் எழுதிப் பாக்கலாம். அவை பின்வருமாறு அமைகின்றன:

  • அ, ஆ, இ
  • அ, இ, ஆ
  • ஆ, அ, இ
  • ஆ, இ, அ
  • இ, அ, ஆ
  • இ, ஆ, அ

மொத்தம் 6 என எண்ணி சொல்ல முடியும்.

ஒரு சுருக்க வழி மூன்று தனி பொருட்களை எத்தனை வரிசைமாற்றம் செய்யும் என்பதைக் கணிக்கும் சூத்திரத்தை அறிந்திர்ப்பதாகும். அதாவது n பொருட்கள் n! வழிகளில் வரிசைப்படுத்த முடியும். எனவே 3 பொருட்களை 3! = 6 வழிகள் என்பதாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முயன்று_தெரிதல்&oldid=1868724" இலிருந்து மீள்விக்கப்பட்டது