ஹொங்கொங் பொது நூலகங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹொங்கொங் மைய நூலகத்தின் முகப்புக் காட்சி

ஹொங்கொங் பொது நூலகங்கள் (Hong Kong Public Libraries) HKPL ஹொங்கொங் பொது மக்களின் வாசிப்புக்காக, ஹொங்கொங் அரசாங்கத்தினால் பராமரிக்கும் நூலகங்கள் ஆகும். இவற்றை ஹொங்கொங் அரசின் பிரதான ஒரு துறையான ஓய்வாற்றல் மற்றும் பண்பாட்டுப் பணிகள் திணைக்களத்தின் நிர்வாகத்தின் கீழ் பிரதேச சபை மற்றும் நகர சபை ஊடாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நூலகங்கள் ஒருங்கிணைக்கப்பட்ட (இலக்க எண்முறை (Digital)) வலைப்பின்னல் கட்டகத்தைக் கொண்டியங்கும் உலகின் மிகப்பெரிய நூலக வலைப்பின்னல் முறைமைகளின் ஒன்றாகும். இந்த நூலக வலைப்பின்னல் முறைமையில் மொத்தம் 65 பொது நூலகங்கள் உள்ளன. அவற்றில் 12.1 மில்லியன் நூல்கள் உள்ளன. இவற்றில் 10 இடம்பெயரும் நூலகங்களும் உள்ளடக்கம்.[1] இந்த நூலங்களில் உள்ள அதிகமான நூல்கள் சீன நூல்கள் ஆகும். இரண்டாம் நிலையில் ஆங்கில நூல்கள் உள்ளன. ஹொங்கொங் புவியியல் ரீதியாக 1104 சதுர கிலோ மிட்டர்களை மட்டுமே கொண்டுள்ளப் போதும், ஒவ்வொரு மாவட்டங்களிலும் வசதிமிக்க பல மாடிகளைக் கொண்ட நூலகங்களைக் கொண்டுள்ளன. இவ்வனைத்து நூலகங்களிலும் இணையப் பாவனை வசதியினையும் இலவசமாக வழங்கப்படுகின்றது.

ஹொங்கொங்கின் முதலாவதாக கட்டப்பட்ட நூலகம் நகர மண்டபம் பொது நூலகம் ஆகும். இது பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் 1962 ஆம் ஆண்டில் கட்டப்பட்டதாகும்.

நூலகப் பணியாளர்கள்[தொகு]

ஹொங்கொங்கில் எந்த நூலகத்திற்கு சென்றாலும் எவ்விதச் சிக்கலுமின்றி நூலகத்தில் உதவிகளை பெற்றுக்கொள்ளலாம். நூலகப் பணியாளர்கள் மிகவும் அமைதியாகவும் பணிவாகவும் நடந்துக்கொள்வார்கள். இலவச இணையப் பாவனை இரண்டு மணித்தியாளங்கள் கொடுக்கப்படும். வாசகர்கள் அழைப்பேசியூடாக தொடர்பு கொண்டு நேரப்பதிவு செய்துக்கொள்ளலாம். ஒவ்வொரு நூலகத்தினுள்ளும் பல கணினிகள் வாசகர்களின் பாவனைக்கு விடப்பட்டுள்ளன. பெரிய நூலகங்களில் நூற்றுக்கணக்கான கணினிகள் ஊடாக இலவச இணைய வசதிகள் வழங்கப்படுகின்றன.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Hong Kong Public Libraries - Introduction". LCSD. 2008-12-30. Archived from the original on 2009-02-21. பார்க்கப்பட்ட நாள் 2009-03-20.

வெளியிணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹொங்கொங்_பொது_நூலகங்கள்&oldid=3573858" இலிருந்து மீள்விக்கப்பட்டது