எம். இலியாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். இலியாஸ் (பிறப்பு: டிசம்பர் 26 1959) தமிழ்நாடு, திருமுல்லைவாசலைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் சிங்கப்பூர் உமறுப் புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலை இரண்டு வரை கற்றார். தமிழ், ஆங்கிலம், மலாய் போன்ற மொழிகளை நன்கறிந்த இவர் பணம் மாற்று வணிகத்தில் ஈடுபட்ட பின்பு தற்போது சொந்தத் தொழிலாக துணிக்கடையொன்றை நடத்தி வருகின்றார்.

இலக்கியப் பணி[தொகு]

1973ல் எழுதத் தொடங்கிய இவரின் முதல் படைப்பு சனவரி 1, 1974ல் தேன் கூடு எனும் தலைப்பில் மாணாக்கர் திங்கள் இதழில் வெளியானது. இவரது படைப்புகள் எழுத்தாளர் இலக்கிய வட்டத்தின் சிறப்பு மலர், தமிழ் முஸ்லிம் ஜமாஅத்தின் தகவல் மடல், ஜி.எம்.டி. நிறுவனம் வெளியிட்ட செவாலியர் சிவாஜியின் சாதனை வரலாறு போன்றவற்றில் இடம்பெற்றுள்ளன.

எழுதியுள்ள நூல்கள்[தொகு]

  • தமிழவேள் சாரங்கபாணி
  • சிவாஜியின் சாதனை

வகித்த பதவிகள்[தொகு]

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் வாழ்நாள் உறுப்பினராகவும், சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம், சிங்கப்பூர் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் ஆகியவற்றின் உறுப்பினராகவும், ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்கத்தின் இலக்கிய அணிச் செயலாளராகவும், பெக் கியோ இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் செயலாளராகவும், முயிஸ் எனும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றத்தின் தமிழ் மொழி வெளியீடான செய்திச் சுடர் இதழின் ஆசிரியர் குழு உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.

பெற்ற பரிசுகள்[தொகு]

  • சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் நடத்திய கட்டுரைப் போட்டியில் 2ம் பரிசு (1974)
  • சிங்கப்பூர் தமிழ் முஸ்லிம் ஜமாஅத்தின் மீலாது பெருவிழாவில் 1ம் பரிசு (1986)
  • சிங்கை வானொலி நடத்திய இன்பநேரம் பாட்டுத் திறன் போட்டியின் பரிசு (1973)
  • தமிழ் மலர் நாளேடு நடத்திய தேசிய அளவிலான பேச்சுப் போட்டியில் 3ம் பரிசு (1974)

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
  • சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக வெளியீடு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._இலியாஸ்&oldid=2713069" இலிருந்து மீள்விக்கப்பட்டது