இந்திய அணு சோதனை காலவரிசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியா நடத்திய அணு ஆயுதம் மற்றும் மின்நிலைய சோதனைகளின் காலவரிசை

1948-1998[தொகு]

  1. 1948 - இந்திய அணுசக்தித்துறை தொடங்கப்பட்டது.
  2. 1955 - அணுசக்தி மையம் செயல்படத்தொடங்கியது.
  3. 1957 - விஞ்ஞானி பாபாவின் பெயரால் பாபா அணு ஆராய்ச்சி மையமானது.
  4. 1962 - நங்கலில் முதலாவது கனநீர் இயந்திரம் நிறுவப்பட்டது.
  5. 1963 - 40 மெகாவாட் திறன் கொண்ட சிரஸ் அணு உலை பழுதடைந்து சீர் செய்யப்பட்டது.
  6. 1967 - யுரேனியத்தை வெட்டி எடுக்கவும், பிரிக்கவும் யுரேனியம் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா உருவாக்கப்பட்டது.
  7. 1969 - தாராப்பூர் அணுசக்தித்திட்டம் யூனிட் 1 மற்றும் யூனிட் 2 வர்த்தக இயக்கத்தை தொடங்கின.
  8. 1971 - கல்பாக்கம் இந்திராகாந்தி அணுஆராய்ச்சி மயம் தொடங்கப்பட்டது.
  9. 1972 - பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் பூர்ணிமா ஆராய்ச்சி ரியாக்டர் தொடங்கப்பட்டது.
  10. 1973 - இராசத்தான் அணுசக்தி மையம் யூனிட் 1 வர்த்தக இயக்கத்தை தொடங்கியது.
  11. 1974 - தார் பலைவனத்தில் உள்ள போக்ரான் என்னுமிடத்தில் முதலாவது இந்திய அணுகுண்டு சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
  12. 1998 - அடுத்தடுத்து 2 நாட்களில் 5 நிலத்தடி அணுகுண்டுகள் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டன.

மூலம்[தொகு]

  • இயர்புக் 2012, வீ.வீ.கே. சுப்புராசு