உள்ளடக்கத்துக்குச் செல்

எல்லோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
"{{Infobox website | name = எல்லோ<br>Ello | lo..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

20:33, 12 அக்டோபர் 2014 இல் நிலவும் திருத்தம்

எல்லோ
Ello
உருவாக்கியவர்பால் பட்னிட்ஸ்
மகுட வாசகம்எளிமை, அழகு, விளம்பரமின்மை
வெளியீடுமார்ச்சு 2014 (2014-03)
உரலிwww.ello.co


எல்லோ இது ஒரு சமூக வலைதளம் ஆகும். அமெரிக்காவைச் சேர்ந்த பால் பட்னிட்ஸ் என்பவர் இந்தத் தளத்தை உருவாக்கியுள்ளார். இந்த தளம் மார்ச் 2014ஆம் ஆரம்பிக்கப்பட்டது. [1]

எல்லோவின் கொள்கைகள் தற்போது மணிக்கு 30 ஆயிரம் பேரை, அந்தத் தளத்திற்குச் செல்ல வைத்துள்ளது.[2]

எப்படி இணைவது?

எல்லோவில் மற்ற சமூக வலைதளங்கள்போல், கணக்கு தொடங்கிவிட முடியாது. முதலில் நாம் அவர்களின் பக்கத்துக்கு போய், நமது மின்னஞ்சலுக்கு ஒரு அழைப்பிதழ் அனுப்பச் சொல்ல வேண்டும். அவர்களும் அன்போடு அனுப்பி வைப்பார்கள். அவர்கள் அனுப்பும் அழைப்பிதழின் சுட்டியைக் கிளிக்கினால், அது எல்லோ பற்றிய கொள்கைகள் விளக்கி விரிகிறது.

எல்லோவின் கொள்கைகள்

எல்லோவின் கொள்கைகள் தற்போது மணிக்கு 30 ஆயிரம் பேரை, அந்தத் தளத்திற்குச் செல்ல வைத்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு ஸ்மார்ட்போனின் ஹோம் ஸ்கிரீனைப் போல் இருக்கும் அந்தத் தளத்தில் ஏற்கெனவே கணக்கு தொடங்கியுள்ள 9 பேரின் முகங்கள் வட்டத்திற்குள் சிரிக்கின்றன. பேஸ்புக்கிலிருந்து வித்தியாசப்படும் விதத்தில் துளிக்கூட விளம்பரங்கள் இல்லாமல் உள்ளது. மேலும் பேஸ்புக்கில் ஒரு கணக்கை அழிக்க 15 நாட்களுக்குக் காத்திருக்க வேண்டும். ஆனால் எல்லோவில் அப்படியில்லை. அந்தக் கணமே கணக்கை அழிக்க முடியும். மேலும் பதிவேற்றும் தகவல்களைப் பத்திரமாகப் பதிவுசெய்து வைக்கத் தனியே டேட்டா சென்டர் நிறுவியுள்ளார்களாம். நாம் பதிவேற்றும் தகவல்களை எப்போது வேண்டுமானாலும் பதிவிறக்கலாம், கணக்கை அழித்த பிறகுகூட இது சாத்தியம்.

சிறப்பான அம்சங்கள்

  • உசுப்பேற்றும் கொள்கை
  • குவியும் நெட்டிசென்கள்
  • போலிக்கு அனுமதி இல்லை

மேற்கோள்கள்

  1. "எல்லோ". Coolclipz.Net.
  2. Smith IV, Jack (September 25, 2014). "Ello's Traffic Deluge Almost Caused a Total New User Freeze-Out, Crisis Averted: At 31,000 Ello invite requests every hour, Ello has decided NOT to shut off access for new users and soldier on through the nuclear hype". பார்க்கப்பட்ட நாள் September 27, 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்லோ&oldid=1737562" இலிருந்து மீள்விக்கப்பட்டது