ஹொலையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹொலையா (Holeya) எனப்படுவோர் இந்தியாவின், கருநாடக மாநிலத்தை சேர்ந்த பட்டியல் சாதியினர் ஆவர்.[1] இவர்கள் கேரளா, மகாராட்டிரம், தமிழ்நாடு மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் வசிக்கின்றனர்.[2][3]

இவர்கள் ஒரு காலத்தில் நில உரிமையாளர்களாக இருந்தனர், இவர்கள் இந்தியாவின் பண்டைய தக்காண நிலப்பரப்பில், பண்டைய ராஜ்ஜியங்களை வளர்த்தனர். இந்திய வரலாற்றின் இடைக்காலத்தில், இவர்களின் இராஜ்ஜிய வீழ்ச்சி அடைந்த பின்பு, போர்வீரராக இருந்த இவர்கள் விவசாயத் தொழிலாளர்களாக கருதப்பட்டன. ஹொலா என்ற சொல்லுக்கு ஒரு விவசாயத் துறை என்றும் பொருள் ஆகும். ஹொலையா என்ற சொல் ஹொலாவிலிருந்து உருவானது என்று கருதப்படுகிறது.[4]

ஹொலையா சமூகம் துணைக் கண்டத்தின் மிகப் பழமையான சமூகங்களில் ஒன்றாகும். இவர்கள் மாநிலத்தின் பழமையான விவசாய சமூகம் என்று கூறப்படுகிறது.

ஹொலையா சில பகுதிகளில் பறையர் என்ற பெயரிலும் அறியப்படுகின்றனர். பழைய தமிழ் கவிதைகள் மற்றும் ஆரம்பகால கிறித்துவ எழுத்துக்களில் பறையன் என்ற வார்த்தையைக் குறிப்பிடவில்லை. ஆனால் ஏனினாஸ் என்ற பழங்குடியினரின் பெயரைக் குறிப்பிடுகின்றன. இவர்கள் மற்றவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவர்கள் மற்றும் கிராமங்களில் வசிக்கவில்லை. ஆனால் தங்கள் சொந்த கோட்டைகளில் வசித்தனர். திரு பிரான்சிஸ், என்னும் வரலாற்றாசிரியர், இன்றைய பறையர் அல்லது ஹொலையா சமூகத்தினர் மூதாதையர்கள் என்று கருதுகிறார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Encyclopaedia Asiatica, Comprising Indian Subcontinent, Eastern and Southern Asia: O-Rhamneae by Edward Balfour. Cosmo Publications, 1976
  2. Census of India, 1991: Madhya Pradesh, Issue 2
  3. Singh, Nagendra Kr (2006). Global Encyclopaedia of the South Indian Dalit's Ethnography (in ஆங்கிலம்). Global Vision Publishing House. p. 251. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788182201682. பார்க்கப்பட்ட நாள் 25 December 2017.
  4. Omvedt, Gail (1994). Dalits and the Democratic Revolution: Dr Ambedkar and the Dalit Movement in Colonial India (in ஆங்கிலம்). SAGE Publications India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788132119838. பார்க்கப்பட்ட நாள் 25 December 2017.
  5. Religion and society, Volume 40. Christian Institute for the Study of Religion and Society, 1993 - Religion
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹொலையா&oldid=2790036" இலிருந்து மீள்விக்கப்பட்டது