ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லா (His Highness Abdullah)
இயக்கம்சிபிமலயில்
தயாரிப்புமோகன்லால்
திரைக்கதைலோகிததாஸ்
இசைரவீந்திரன்
நடிப்புமோகன்லால்
நெடுமுடி வேணு
கௌதமி
திக்குரிசி சுகுமாரன் நாயர்
ஸ்ரீனிவாசன்
கவியூர் பொன்னம்மா
ஜனார்த்தனன் நாயர்
எம். ஜீ. சோமன்
ஜகதீஷ்
சுகுமாரி
ஒளிப்பதிவுஅனந்தகுட்டன்
படத்தொகுப்புபூமிநாதன்
விநியோகம்பிரணவம் ஆர்ட்ஸ்
வெளியீடு1990
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லா (மாட்சிமை தங்கிய அப்துல்லா, His Highness Abdulla) 1990ல் திரையிடப்பட்ட மலையாளத் திரைப்படம். நடிகர் மோகன்லால் தயாரித்த இன்னுமொரு இசைக் காவியமாகும். அவர் தயாரித்த பரதம் திரைப்படத்தைப் போலவே, இத்திரைப்படத்திலும் ரவீந்திரன் இசையமைத்த அற்புதமான கருநாடக இசை வடிவத்தில் அமைந்த பாடல்களை, கே. ஜே. யேசுதாஸ், எம்ஜி. ஸ்ரீகுமார், ரவீந்திரன், சித்ரா, சுஜித் ஆகியோர் பாடியிருந்தார்கள்.

இத்திரைப்படத்தில் மோகன்லால், நெடுமுடி வேணு, கௌதமி, திக்குரிசி சுகுமாரன் நாயர், ஸ்ரீனிவாசன், எம். ஜீ. சோமன் முதலானோர் நடித்தார்கள். இயக்குனர் சிபிமலயில் இத்திரைப்படத்தையும் இயக்கினார்.


கதை[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

கஜல் பாடகன் என அறியப்பட்ட ஒருவன் (மோகன்லால்) பம்பாயிலிருந்து புறப்பட்டு ஒரு மகாராஜாவை (நெடுமுடி வேணு) கொல்வதற்காக கேரளத்திற்கு வருகிறான். அங்கு மகாராஜாவின் உறவினர்களே அவர் சொத்துக்களை அபகரிக்க முயல்வதையும் காண்கிறான். மகாராஜாவின் அரண்மனையில் நிலவும் சங்கீதச் சூழல் அவனது மனதை மாற்றுகிறது.

விருதுகள்[தொகு]

  • தேசிய விருது - சிறந்த துணை நடிகர் - நெடுமுடி வேணு
  • தேசிய விருது - சிறந்த பின்னணிப்பாடகர் - எம். ஜீ. ஸ்ரீகுமார் - "நாதரூபினி" பாடலுக்காக

பாடல்கள்[தொகு]

  • பிரமதவனம் வேண்டும் - கே. ஜே. ஜேசுதாஸ்
  • கோபிகா வசந்தம் - கே. ஜே. ஜேசுதாஸ் - சித்ரா
  • நாதரூபினி - எம். ஜீ. ஸ்ரீகுமார்
  • தேவசபாதலம் - கே. ஜே. ஜேசுதாஸ், ரவீந்திரன், சுஜித் பாடியது.

வெளி இணைப்புகள்[தொகு]