வைரமங்கலம் லட்சுமி நாராயணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வைரமங்கலம் லட்சுமி நாராயணன் (Vairamangalam Lakshmi Narayanan)(1928-2004) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு கருநாடக இசைக் கலைஞர் ஆவார். இவர் பிரபல பாடகர் டி. கே ரங்காச்சாரியின் மாணவர்.

ஒரு பாடகராக லட்சுமி நாராயணன் பல்துறை பாடகர் ஆவார். இவரால் ராகங்களின் நுணுக்கங்களை மேம்படுத்தவும் வெளிப்படுத்தவும் முடியும். நளினகாந்தி, நாயகி, நாராயணி, நாடகப்ரியா, நாகஸ்வரலி, தர்மவதி, ஜனரஞ்சனி, அந்தோலிகா போன்ற மிகவும் தெளிவற்ற மற்றும் அரிதாகப் பயன்படுத்தப்படும் ராகங்களில் லட்சுமி நாராயணனால் விரிவாகப் பாட இயலும்.[1]

விருதுகள்[தொகு]

லட்சுமி நாராயணன் தனது திறமைக்காகப் பல விருதுகளைப் பெற்றுள்ளார். இவரது இசைப் பங்களிப்பிற்காக, இவர் இறப்பதற்குச் சற்று முன், தமிழ்நாடு அரசு அவருக்கு கலைமாமணி விருதினை இவருக்குக் வழங்கியது. திவ்ய பிரபந்தங்கள் பற்றிய இவரது பணிக்காக, இந்திய அரசின் கலாச்சாரத் துறை 2000ஆம் ஆண்டில் இவருக்கு நிதியுதவியினை வழங்கியது.

மேற்கோள்கள்[தொகு]