வெளிநேரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வெளிநேரத் திரிபு முப்பரிமாண ஒப்புமை. பொருள் வெளிநேரத்தின் வடிவத்தை மாற்றுகிறது. இந்த வளைந்த வடிவம் ஈர்ப்பு என விளக்கப்படுகிறது. வெள்ளைக் கோடுகள் வெளியின் வளைவைக் குறிக்காவிட்டாலும், வளைந்த வெளிநேரத்தில் உள்ள ஆள்கூற்று முறைமைகளைக் குறிக்கின்றது.

இயற்பியலில், வெளிநேரம் (spacetime) என்பது, வெளி மற்றும் நேரம் என்பவற்றை ஒரே கட்டமைப்புக்குள் கொண்டுவரும் ஒரு கணித மாதிரி ஆகும். இது வெளி-நேரத் தொடரியம் எனப்படுகின்றது. வெளிநேரம் என்பதில் வெளி (space) மூன்று பரிமாணங்களைக் கொண்டது. நேரம் இவற்றுடன் நான்காவது பரிமாணம் ஆகின்றது.

யூக்கிளிட்டின் வெளி பற்றிய நோக்கின்படி, அண்டம் மூன்று பரிமாணங்கள் உடைய வெளியையும், ஒரு பரிமாண நேரத்தையும் கொண்டது. இவ்விரண்டையும் ஒன்றாக்கிய போது, இயற்பியலாளர்கள் பெருமளவு இயற்பியல் கோட்பாடுகளை எளிமைப் படுத்தியதுடன், அண்டத்தின் செயற்பாடு பற்றியும் சீரான முறையில் விளக்க முடிந்தது.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்