வீரராமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வீரராமன்
சபடலக்ச நாட்டின் ஆட்சியாளர்
ஆட்சிக்காலம்சுமார் 1040 பொச.
முன்னையவர்இரண்டாம் வாக்பதிராஜா
பின்னையவர்சாமுண்டராஜா
அரசமரபுசாகம்பரியின் சௌகான்கள்

வீரராமன் (Viryarama) (ஆட்சி 1040 பொ.ச.) சாகம்பரியின் சௌகான் வம்சத்தைச் சேர்ந்த ஒரு இந்திய மன்னராவார். வடமேற்கு இந்தியாவில் இன்றைய இராஜஸ்தானின் சில பகுதிகளை உள்ளடக்கிய சபடலக்ச நாட்டை ஆட்சி செய்தார்.

வீரராமன், இரண்டாம் வாக்பதிராஜாவுக்குப் பிறகு சகமான மன்னராக பதவியேற்றார். வரலாற்றாசிரியர் ஆர்.பி.சிங்கின் கூற்றுப்படி, இவரும் சாமுண்டராஜா ஆகிய இருவரும் வாக்பதிராஜாவின் மகன்கள். [1] இருப்பினும், தசரத சர்மா இவர்கள் இருவரைத் தவிர மூன்றாம் கோவிந்தராசன் என்பவரையும் மகனாகக் கருதுகிறார். [2]

பிருத்விராஜ விஜயம் என்ற நூலின் கூற்றுப்படி, வீரராமன் பரமார மன்னன் போஜனால் கொல்லப்பட்டார். [1] வீரராமன் பரமார மன்னன் போஜனால் கொல்லப்பட்டார். பரமார்கள் சாகம்பரியை சிறிது காலம் ஆக்கிரமித்திருக்கலாம். வரலாற்றாசிரியர் தசரத சர்மாவின் கூற்றுப்படி, சாமுண்டராஜா அவர்களை நாதுல்லா சகமன ஆட்சியாளர் அனகில்லாவின் ஆதரவுடன் வெளியேற்றியிருப்பார். அனகில்லா போஜனின் படைத்தளபதி சாதாவைக் கொன்றதாகவும், சாகம்பரியைக் கைப்பற்றியதாகவும் நாதுல்லா சகமனாக்களின் சுந்தா கல்வெட்டு கூறுகிறது. வீரராமனின் மரணத்திற்குப் பிறகு பரமாரர்கள் சாகம்பரியை ஆக்கிரமித்ததாகவும், அனகில்லாவின் உதவியுடன் அவரது வாரிசான சாமுண்டராஜனால் வெளியேற்றப்பட்டதாகவும் வரலாற்றாசிரியர் தசரத சர்மா கருதுகிறார். [3] மறுபுறம், அனகில்லாவும் போஜனும் வீரராமனுக்கு எதிராக கூட்டணி அமைத்ததாக ஆர்.பி. சிங் ஊகிக்கிறார்; சிறிது நேரம் கழித்து, கூட்டணி முறிந்தது. அனகில்லா போஜனின் தளபதி சதாவைக் கொன்றார். [4]

சான்றுகள்[தொகு]

நூல் பட்டியல்[தொகு]

  • Dasharatha Sharma (1959). Early Chauhān Dynasties. S. Chand / Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780842606189.
  • R. B. Singh (1964). History of the Chāhamānas. N. Kishore. இணையக் கணினி நூலக மைய எண் 11038728.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரராமன்&oldid=3426675" இலிருந்து மீள்விக்கப்பட்டது