வீரன் முத்துராக்கு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வீரன் முத்துராக்கு
வீரன் முத்துராக்கு
இயக்கம்ராசசேகரன்
கதைராசசேகரன்
இசைகோபாலகிருஷ்ணன்
நடிப்பு
  • கதிர்
  • லியா சிறீ
ஒளிப்பதிவுபாசுகர்
வெளியீடுமார்ச்சு, 2014
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வீரன் முத்துராக்கு 2014 மார்ச்சில் வெளிவந்த திரைப்படமாகும். இதை ராசசேகரன் இயக்கியுள்ளார்[1]. கதிர், லியா சிறீ போன்றோர் நடித்துள்ளனர்.

கதைச்சுருக்கம்[தொகு]

நரேனும், சண்முக சுந்தரமும் பக்கத்து பக்கத்து கிராமத்தின் தலைவர்கள். 30 ஆண்டுக்கு முன்னால் நடந்த சண்டையில் சண்முக சுந்தரத்தின் ஒரு காலை நரேன் உடைத்துவிடுகிறார். அன்றிலிருந்து இருவருக்குள்ளும் பகை உண்டாகிறது.

இவர்களது மகன்கள் வளர்ந்து பெரியவர்களானதும், இவர்களுக்குள் நடக்கும் சிலம்பு சண்டையில் நரேனின் மகனான கதிர் வெற்றி பெறுகிறார். இதனால் மேலும் கோபமடைந்த சண்முக சுந்தரம் நரேனை பழிதீர்க்க நேரம் பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.

நரேனின் ஊரில் ஏதாவது கலவரத்தை தூண்டி நரேனை பழிதீர்க்க பார்க்கிறார். ஆனால், அது நடக்காமல் போகிறது. ஒருநாள் நரேன் ஊர் வழியாக செல்லும் பேருந்தை வழிமறிக்கும் கதிர், அந்த பேருந்தில் பயணம் செய்யும் நாயகி லியா சிறீயை பார்த்ததும் காதல்வயப்பட்டு விடுகிறார். நாளடைவில் இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். லியாசிறீ சண்முக சுந்தரத்தின் தங்கையின் மகள்.

இந்நிலையில், நரேன் கொலை செய்யப்படுகிறார். மாடு முட்டிதான் அவர் இறந்தார் என காவல்துறை அந்த கொலையை மூடி மறைக்கிறது. தனது தந்தை இறந்த சோகத்தில் ஊரில் வாழப் பிடிக்காத நாயகன் காட்டுக்குள் சென்று வாழ்ந்து வருகிறார்.

லியாசிறீக்கும் சண்முகசுந்தரத்தின் மகனுக்கும் திருமணம் செய்துவைக்க முடிவெடுக்கின்றனர். இதுபிடிக்காத லியாசிறீ, கதிரைத் தேடி காட்டுக்குள் செல்கிறாள். இதை அறிந்த சண்முகசுந்தரம் அவளை பின்தொடர்ந்து சென்று லியாசிறீயை கொன்று விடுகிறார்.

சித்தப்பா நமோ நாராயணனும், சண்முக சுந்தரமும் சேர்ந்துதான் தனது தந்தையை கொன்றார்கள் என்பது கதிருக்கு தெரிய வருகிறது. தன் தந்தை மற்றும் காதலி சாவுக்கு காரணமானவர்களை கதிர் பழிதீர்த்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://cinema.maalaimalar.com/2014/03/08182909/Veeran-Muthu-Raku-movie-Review.html