விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் (Free electricity to farmers) இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் ஆந்திர அரசு வழங்கும் மானியத்துடன் கூடிய இலவச மின்சார திட்டமாகும். இத்திட்டம் மறைந்த முதலமைச்சர் டாக்டர் ஒய்.எசு. ராச சேகர ரெட்டியின் கனவுத் திட்டமாகும். வேளாண் துறைக்கு இலவச மின்சாரம் வழங்கிய ஒரே தலைவர் இவர்தான் என்று கருதப்படுகிறது. பசுமை ஆந்திரா என்பது அவரது தொலைநோக்குப் பார்வையாகும்.[1] ஒரு நாளில் வயல்களுக்கு 7 மணிநேர சக்தியை இத்திட்டம் வழங்குகிறது. 2013 ஆம் ஆண்டு இதற்காக சுமார் 6000 கோடி செலவிடப்பட்டது.[2]

வரலாறு[தொகு]

காங்கிரசு கட்சி வாக்காளர்களுக்கு வாக்குறுதியளித்த்தைத் தொடர்ந்து, ஆந்திராவின் முதல்வராக ஒய்.எசு. ராசசேகர ரெட்டி பதவியேற்றவுடன் 2004 ஆம் ஆண்டு மே மாதம் 14 அன்று இந்த திட்டத்தில் கையெழுத்திட்டார்.[3][4][5][6]

தேர்தல் நடப்பதற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட திட்டம் என்பதால் 2004 பொதுத் தேர்தலில் இதுவொரு பெரிய வாக்குறுதியாக இருந்தது. ஆரம்ப மானிய மசோதா ரூ. 400 கோடிகளாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Bureau, Our. "Free power to farmers will continue, says AP CM". @businessline (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-03-06.
  2. "Will free power ruin Congress in Andhra Pradesh?". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2019-03-06.
  3. Menon, Amarnath K. (7 June 2004). "Andhra Pradesh CM Y.S. Rajasekhara Reddy orders free power to state farmers" (in en). https://www.indiatoday.in/magazine/states/story/20040607-ys-rajasekhara-reddy-sworn-chief-minister-andhra-pradesh-order-sops-farmers-789753-2004-06-07. 
  4. "Andhra Pradesh News: No free electricity to farmers who waste it, says YSR". தி இந்து. 2005-11-04. பார்க்கப்பட்ட நாள் 2019-03-06.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "The Hindu Business Line : 'Free power to farmers in AP an economic compulsion'". www.thehindubusinessline.com. பார்க்கப்பட்ட நாள் 2019-03-06.
  6. "Reddy orders free power to AP farmers, waives dues". www.rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2019-03-06.