விரார் மருத்துவமனை தீவிபத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விரார் மருத்துவமனை தீவிபத்து (Virar hospital fire) இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்திலுள்ள விரார் நகரத்தில் ஏற்பட்ட தீவிபத்தைக் குறிக்கிறது. 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதியன்று நிகழ்ந்த இத்தீவிபத்தில் 13 கோவிட்-19 நோயாளிகள் கொல்லப்பட்டனர்.[1][2][3][4]

பின்னணி[தொகு]

கோவிட்-19 பெருந் தொற்றுநோயால் இந்தியா அப்போது மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது.[1][2] நெரிசல் மற்றும் ஆக்சிசன் பற்றாக்குறை ஆகிய நெருக்கடிகள் அடிக்கடி ஏற்பட்ட பிரச்சனைகளில் அடங்கும்.[1][2] 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதியன்று மகாராட்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள ஒரு மருத்துவமனையில் 24 கோவிட் நோயாளிகள் ஆக்சிசன் விநியோகம் தடைபட்டதால் இறந்தனர்.[1][2] 2021 ஆம் ஆண்டில், இந்தியாவில் மும்பை மற்றும் பருச்சிலும் மருத்துவமனைகளில் தீ விபத்து ஏற்பட்டது.

விபத்து[தொகு]

2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதியன்று அதிகாலையில், இந்திய மாநிலமான மகாராட்டிராவில் மும்பைக்கு வடக்கே உள்ள விரார் நகரத்தில் உள்ள விசய் வல்லப் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது.[1][2][3] அந்த நேரத்தில் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் 17 நோயாளிகள் இருந்தனர். அவர்களில் 13 பேர் கொல்லப்பட்டனர். [1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Covid-19: India hospital fire as virus cases hit record high". BBC. 23 April 2021. https://www.bbc.co.uk/news/world-asia-56855387. பார்த்த நாள்: 4 June 2023. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Fire kills at least 13 Covid patients in hospital in western India
  3. 3.0 3.1 3.2 13 COVID-19 patients die in Maharashtra hospital fire
  4. "Fire kills COVID patients in Virar; Nestle records highest sales in 10 yrs". Business Today (India). 23 April 2021. பார்க்கப்பட்ட நாள் 24 April 2021.