விண் தூக்கி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(விண்வெளி உயர்த்தி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
விண் தூக்கி அல்லது விண்வெளித் தூக்கி (Space elevator) எனப்படுவது புவியில் இருந்து விண்வெளிக்கு ஆட்களையும் பொருட்களையும் எடுத்துச் செல்லும் வண்ணம் திட்டமிடப்பட்டிருக்கும் ஒரு கட்டமைப்பு ஆகும். அதாவது புவியில் மாடிகளுக்கு செல்லும் உயர்த்தி போன்று புவிக்கும் விண்வெளிக்கும் செல்லும் உயர்த்தி விண் தூக்கி ஆகும். இந்த கருத்துரு கொன்ஸ்டன்டீன் த்சியல்கோவ்ஸ்கி என்பவரால் முதலில் முன்வைக்கப்பட்டது.