விக்கிப்பீடியா பேச்சு:நிருவாகிகளுக்கான அறிவிப்புப் பலகை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புதிய பயனர்கள் எழுதும் கட்டுரைகள் முழுதும் குப்பையாக இருந்தால் மட்டுமே உடனடியாக நீக்க வேண்டுகிறேன். புதிய பங்களிப்பாளர்கள் வரத்தே குறைவு என்றிருந்த நிலை மாறி ஏதாவதாவது எழுதிப் பார்க்க முனைகிறார்களே என்பதே நல்ல முன்னேற்றம் தான். பல விக்கி இயக்கங்களிலும் தற்போது முன்னோடிப் பங்களிப்பாளர்களாக உள்ளவர்கள் பலரும் தொடக்கத்தில் பிழை விட்டவர்கள், விக்கிப்பீடியாவைப் புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் தான். ஒருவர் தான் எழுதிய கட்டுரையை அடுத்த சில நிமிடங்களிலேயே காண இயலாமல் நீக்கினால் அவர் குழப்பமும் திகைப்பும் அடையலாம். தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கக்கூடிய பல நல்ல பங்களிப்பாளர்களே கூட (தனிப்பட பேசும்போது) தங்கள் முதல் கட்டுரை நீக்கப்பட்டதால் திரும்ப பங்களிக்க முனையவில்லை என்று கூறியுள்ளார்கள். ஏன் நீக்கப்பட்டது என்றும் புரியவில்லை என்றும் கூறி இருக்கிறார்கள்.

எனவே, புதிய பங்களிப்பாளர்கள் ஓரளவு தமிழில் எழுத முனைபவராகவோ கலைக்களஞ்சிய நடையைப் புரிந்து கொள்ளாதவராகவோ இருந்தால் கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாம். அண்மையில் பங்களிக்கத் தொடங்கியிருக்கும் சில பயனர்கள், ஒரு சில தடுமாற்றங்களுக்குப் பிறகு விக்கிப்பீடியாவைப் புரிந்து கொண்டு பங்களிப்பதைக் காண முடிகிறது.

எடுத்துக்காட்டுகள்

எனவே, அவர்களது பேச்சுப் பக்கம், ஒத்தாசைப் பக்கத்தில் தகுந்த உதவி அளிப்போம். கட்டுரையை நீக்கினாலும் அவரது பேச்சுப் பக்கத்தில் {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}} என்னும் வார்ப்புரு இடுவதுடன் தகுந்த உதவிக் குறிப்புகளும் அளிப்போம். அவர்கள் எழுத முனைந்த கட்டுரைகளை விரிவாக்கி, உரை திருத்தி, விக்கியாக்கம் செய்வோம். நன்றி.--இரவி (பேச்சு) 17:03, 4 மார்ச் 2013 (UTC)