விக்கிப்பீடியா பேச்சு:தோழமை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பன்னாட்டு தொழிற்சூழலில் வேலைசெய்பவர்களுக்குப் பெயர் சொல்லி அழைப்பது பழகியிருக்கலாம். சிலர் பெயர் சொல்லி அழைப்பதை மட்டும் விரும்பலாம். ஏனையோருக்கு இதில் விருப்பமா என்பது சிந்திக்கவேண்டிய விசயம். ஒரு புறம் விக்கிப் பட்டறைகள், கூடல்கள் நடத்தி விக்கிப் பயனர்களின் நட்புறவை வளர்க்க முனைவதும், மறுபுறம் மெய்நிகர் வெளிக்கான அடையாளங்களை வளர்ப்பதும் முரணாகத் தெரிகிறது. மரியாதையுடன் கூப்பிடுவது பெரியோரை வியத்தல் ஆகிவிடாது என்பது இச்சிறியோனின் கருத்து. மேலும் இன்சொல் பதங்கள் விக்கி உளைச்சலுக்கு ஒருவகையான மருந்தும் கூட --நீச்சல்காரன் (பேச்சு) 05:57, 10 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:32, 10 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]