விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா தர மேம்பாட்டுக் கருத்துக்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மயூரனாதன், எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் ஒரு அளவுக்கு மேல் அளவையும் தரத்தையும் கூட்ட வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக வலிந்து எல்லா கட்டுரைகளையும் விரிவாக்கத் தேவை இல்லை என்று தோன்றுகிறது. எவருக்குமே ஆர்வமூட்டாத சில கட்டுரைகள் அப்படியே அளவு குறைத்து இருந்தாலும் பரவாயில்லை. ஏனெனில், உண்மையிலேயே அத்தலைப்புகளில் ஆர்வமுடையோர் பின்னர் இணையும் போது அக்கட்டுரைகளை இன்னும் சிறப்பாக மேம்படுத்த இயலும். குறுங்கட்டுரைகளில் நம் ஒவ்வொருவருக்கும் மிகவும் ஆர்வமுள்ளவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து மேம்படுத்த முனையலாம். மற்றபடி, இனி உருவாக்கும் கட்டுரைகளில் எண்ணிக்கை, தலைப்பின் முக்கியத்துவம் தவிர, அவற்றில் நமக்குத் தனிப்பட்ட ஆர்வமும் இருக்கும் தலைப்புகளாகத் தேர்ந்தெடுத்து ஆக்கும் எல்லா கட்டுரைகளையும் ஒரு கணிசமான குறைந்தபட்ச அளவுடன் உருவாக்குவது என்று ஒருவருக்கு அவரே கட்டுப்பாட்டை விதித்துக் கொண்டு செயல்படலாம். தொலைநோக்கில் அவரவர்களுக்கு ஆர்வமுடைய துறைகளில் விரிவான கட்டுரைகளை எழுதினால் நல்ல உயிர்ப்புடைய கட்டுரைகளை உருவாக்கலாம். இந்த விதத்தில் வினோத் தனக்கு ஆர்வமான துறைகளில் விரிவாக எழுதுவது நல்ல முன்மாதிரி. ஒட்டு மொத்த விக்கிப்பீடியாவின் தரம் குறித்து கவலை கொண்டு நம் ஆர்வப்புலத்துக்குச் சற்று விலகிய துறைகளில் கட்டுரை எழுதினால் கட்டுரையின் உயிர்ப்பு குறைவாக இருக்குமோ என்று தோன்றுகிறது. தற்போது அளவு குறைவாக இருக்கும் பல கட்டுரைகளும் கூட இப்படி ஒட்டுமொத்த விக்கிப்பீடியாவின் எண்ணிக்கை உயர்வை மனதில் கொண்டு எழுதப்பட்டவை தான். இன்று அளவு குறைவாக உள்ள குறை கண்ணில் படுகிறது. நாளை அதே அளவு கூடியும் தரமோ உயிர்ப்போ குறைவான குறையாக மாறக்கூடும். --ரவி 23:11, 17 மார்ச் 2008 (UTC)

மயூரநாதன், செல்வாவின் கருத்துக்கள் முக்கியமானவை. மயூரநாதன், கனக்ஸ் போன்றோர் த.வி.யின் ஒட்டுமொத்த வளர்ச்சியை மனதில் கொண்டே தொடர்ச்சியாகக் கட்டுரைகளை உருவாக்கி வருகின்றனர். அவ்வகையில் திட்டமிட்ட விரிவாக்கத்தைக் கோரும் பயனர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். திட்டமிட்ட வளர்ச்சியின்மையே த.வி.யின் முக்கிய குறை. பொதுவான விக்கிப்பீடியாக்களைப் போலில்லாமல் எமக்கான தேவையை முன்னிறுத்தியே தமிழ் விக்கிப்பீடியாவை அணுக வேண்டியுள்ளது. மேலும் மலையாள விக்கி தமிழை விடத் தரமான கட்டுரைகளை உருவாக்குவதாகத் தோன்றுகின்றது.

10,000 த்தைத் தாண்டியபின்னர் உருவாகும் கட்டுரைகளில் பெரும்பாலானவை 1000-2000 பைட்டைத் தாண்டுகின்றன. அவ்வகையில் ஏற்கனவே உள்ள கட்டுரைகளை விரிவாக்குவது பயனுள்ளதாக இருக்கும்.

குறிப்பாக முதல் 4000 குறுங்கட்டுரைகளில் சுமர் 500 கட்டுரைகளாவது இப்போதைய பயனர்களின் ஆர்வத்துறைகளுக்குள் வருபவையே. அவற்றைத் தேடியடைவதற்கு முக்கியத்துவமளிக்காமையாலேயே அவை தொடர்ந்தும் குறுங்கட்டுரைகளாக உள்ளன. ஒரு மாதத்தைக் குறுங்கட்டுரை விரிவாக்கத்தில் கவனம் செலுத்துவதற்காக ஒதுக்கி அம்மாதத்தில் 10 பயனர்கள் விரிவாக்கத்தில் பங்களித்தால் சுமார் 500 கட்டுரைகளுக்காவது மேலதிக விபரங்கள் சேர்த்துவிடலாம்.

ஆனால் வழிமாற்றுப் பக்கங்கள் தவிர ஏனைய கட்டுரைகள் எவையும் 512 பைட் அளவினை விடச் சிறியதாக இருக்க வேண்டியதில்லை என்றே தோன்றுகிறது. தலைப்பை விளக்கும் சில வசனங்களைச் சேர்த்தாலேயே கட்டுரை 512 பைட்டைத் தாண்டிவிடுகிறது. குறுங்கட்டுரைகள் பக்கத்தின்படி சுமார் 1500 கட்டுரைகள் 1000 பைட்டை விடச் சிறியவையாக இருந்தன. இப்பொழுது 500 தான் உள்ளன. (பக்கத்துக்கு 500 வீதம் 3 குறுங்கட்டுரைப் பக்கங்களை favourite இல் குறித்து வைத்திருந்தேன். இப்பொழுது ஒன்றுதான் உள்ளது) புதிதாக எழுதப்படும் கட்டுரைகள் எவையும் 1000 பைட்டை விடச் சிறியவையாக இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லதெனப் படுகிறது. கோபி 06:11, 18 மார்ச் 2008 (UTC)

முதல் கட்டமாக 64-128 பைட்டுகளுக்கு இடையில் உள்ள 45 கட்டுரைகளையும் இனங்கண்டு விரிவாக்க வேண்டும். இவற்றில் வழிமாற்றிப் பக்கங்கள் பல இருக்கலாம். கோபி 09:16, 21 மார்ச் 2008 (UTC)