விக்கிப்பீடியா பேச்சு:இம்மாத பயனர் தெரிவுக் கட்டுரைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் விக்கிபீடியாவில் புதைந்து கிடக்கும் பல சிறப்புக்கட்டுரைத் தகுதியை பெறாத கட்டுரைகளை தகுந்த முறையில் காட்சிப்படுத்த் எடுக்கப்பட்ட ஒரு முயற்சியே இது. இப்பக்கத்தை நோக்கி சில கூற்றுக்கள்:

  • ஒவ்வொரு மாதமும் ஒரு பயனர் தெரிவுகளை மேற்கொள்ளலாம்.
  • தெரிவுகள் சிறப்புக்கட்டுரைகளாகவோ அல்லது உங்களுக்குத்தெரியுமா கட்டுரைகளாகவோ அல்லாமல் மற்றவையாக அமைந்தல் வேண்டும்.
  • முன்னர் தெரியப்பட்டவையை மீண்டும் தெரிவு செய்யாமல் இருப்பது நன்று.
  • ஓரளவு தகவல்களையாவது தாங்கியிருக்க வேண்டு.
  • ஓரளவு பூர்தியான கட்டுரைகள் நன்று.
  • ஒவ்வொரு கட்டுரைக்கும் ஒரு படிமமாவது இணைத்தல் நன்று.
  • ஒரே (பிரதம) பயனரால் எழுதப்பட்ட பல கட்டுரைகளைத் தெரிதலைத் தவிர்த்தல் நன்று.
  • விரும்பினால் பட்டியல், காலக்கோடு போன்றவற்றையும் தெரியலாம்.

பெயர் சற்று இடிக்கின்றது, வேறு எதாவது பரிந்துரைகள்... பிற பயனர்களின் கருத்துகளும் வேண்டப்படுகின்றன. பலத்த ஆட்சோபனை இருந்தால், அவை என்னவென்று தெளிவுபடுத்தினால் இத்திட்டத்தை கைவிடலாம். --Natkeeran 05:53, 9 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]


நற்கீரன், பக்க வடிவமைப்பும் கருத்துருவும் மிக நன்று. பாராட்டுக்கள். சிறப்புக் கட்டுரைகள் குறைவாக இருக்கும் நிலையில் இது போன்று பல தரப்பட்ட சிறப்புக் கட்டுரை அல்லாத தரமான கட்டுரைகளையும் காட்சிப்படுத்துதல் நன்று. இப்பக்கத்தில் உள்ள கட்டுரைத் தலைப்புகள் அனைத்தும் முதல் பக்கத்தில் இருந்து தெளிவாக இணைப்புகள் தெரியுமாறு வடிவமைக்க வேண்டும். இன்று மாலை செய்து தருகிறேன். பிறகு, ஒவ்வொரு மாதமும் இதை ஒருவரே தெரிந்து எடுத்து வடிவமைப்பது என்றால் (தமிழ்மண நட்சத்திரம் போல) கொஞ்சம் சிக்கல் தான். ஏனெனில், தற்பொழுது, நீங்கள், சுந்தர், நான் போன்றோர் தவிர வெகு சிலரே இது போன்று பக்க வடிவமைப்புகளில் ஈடுபடுகிறோம். நாமே இதை ஒவ்வொரு வாரமும் செய்ய வேண்டியிருக்கும். கட்டுரைத் தலைப்புகளுக்கான பரிந்துரைகளை எவர் வேண்டுமானால் பேச்சுப் பக்கத்தில் இட்டுச் செல்லலாம். தவிர, தற்பொழுது முழுமையான கட்டுரைகளை ஒரு சில பயனர்களே எழுதி வருகின்றனர். எனவே, ஒரே ஒருவர் எழுதிய பல கட்டுரைகள் இடம்பெறக்கூடாது என்ற விதியை தளர்த்தலாம்.--ரவி 07:58, 9 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]


நன்றி. ரவி மயூரன், மயூரேசன், உமாபதி, செல்வா, கனகு, வைகுண்ட ராஜா, கலாநிதி எனப் பல பயனர்கள் நன்றாக தொகுத்து வருகின்றார்கள். நான் ஒரு எளிய Template பின்னர் உருவாக்குகின்றேன். ஒரு பயனர் தெரியும் பொழுது அதில் எதோ ஒரு ஒற்றுமை வரும். ஒவ்வொரு வாரமும் இல்லை, இப்போதைக்கு ஒவ்வொரு மாதமும் போதும் என்று நினைக்கின்றேன், அல்லது இரு வாரத்துக்கு ஒரு முறை. பல பயனர்கள் எழுதிய கட்டுரைகளையும் காட்சிப்படுத்த வேண்டும் என்றே அவ்வாறு குறிப்பிட்டேன். அதை இறுகக் கடைப்பிடிக்க தேவையில்ல. --Natkeeran 16:25, 9 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

கட்டுரைகள் காட்சிப்படுத்தும் கட்டகம்[தொகு]

இம்மாத பயனர் தெரிவுக் கட்டுரைகள்
இலக்கியம் - தலைப்பு பண்பாடு - தலைப்பு
படிம விளக்கம்
இங்கு இலக்கியப் பகுப்பு கட்டுரையை இடவும்
படிம விளக்கம்
இங்கு பண்பாட்டு பகுப்பு கட்டுரையை இடவும்
வரலாறு - தலைப்பு அறிவியல் - தலைப்பு
படிம விளக்கம்
இங்கு வரலாற்று பகுப்பு கட்டுரையை இடவும்
படிம விளக்கம்
இங்கு அறிவியல் பகுப்பு கட்டுரையை இடவும்
கணிதம் - தலைப்பு புவியியல் - தலைப்பு
படிம விளக்கம்
இங்கு கணித பகுப்பு கட்டுரையை இடவும்
படிம விளக்கம்
இங்கு புவியியல் பகுப்பு கட்டுரையை இடவும்
சமூகம் - தலைப்பு தொழில்நுட்பம் - தலைப்பு
படிம விளக்கம்
இங்கு சமூகம் பகுப்பு கட்டுரையை இடவும்
படிம விளக்கம்
இங்கு தொழில்நுட்பம் பகுப்பு கட்டுரையை இடவும்
நபர்கள் - தலைப்பு இம்மாத படிமம்
படிம விளக்கம்
இங்கு நபர்கள் பகுப்பு கட்டுரையை இடவும்
படிம விளக்கம்