விக்கிப்பீடியா:விக்கி மின்மினிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மின்மினிகள் கவித்துவமானவை. பல ஒன்றுகூடும் போது இதமான ஒளி அளிப்பவை. அது போல், விக்கிப்பீடியாவில் அவ்வப்போது சிறு சிறு தொகுப்புகள் செய்து உதவுவோரை விக்கி மின்மினிகள் எனலாம். ஆங்கிலத்தில் Wiki Gnome என்று கூறுவதற்கு ஒப்பாக இதனை நோக்கலாம்.

முகநூல் -> விக்கி மின்மினிகள் திட்டம்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியா முகநூல் குழுவில் ஆயிரக்கணக்கில் உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் சிலரை இவ்வாறு விக்கி மின்மினிகளாக பங்களிக்கச் செய்ய இயலுமா என்று சூலை 2014 முழுக்க ஒரு சோதனைத் திட்டத்தில் ஈடுபடுகிறோம். இது தொடர்பான தகவல் இப்பக்கத்தில் இற்றைப்படுத்தப்படும்.

விக்கிப்பீடியாவுக்குப் புதிய பங்களிப்பாளர்களை எப்படி ஈர்ப்பது என்பது தான் உலகம் முழுக்க மண்டையை உடைத்துக் கொள்ளும் பல கோடி மதிப்பு மிக்க கேள்வியாக இருக்கிறது. முகநூல் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் விக்கிப்பீடியா பங்களிப்பைக் கூட்ட முடியுமா? எந்த அளவு கூட்ட முடியும்? என்ன வகையான பங்களிப்புகளைப் பெற முடியும்? என்ற கேள்விகளுக்கு விடையாக இம்முயற்சி அமையும். ஏனெனில், சேர்த்த உறுப்பினர்களை வைத்து என்ன சாதிக்கலாம் என்று தெரியாவிட்டால் மேற்கொண்டு புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதில் பொருள் இல்லை.

சூலை 2014 மாதம் முழுக்க பங்களிப்புகளைத் தூண்டும் சிறு பயிற்சிகளை இங்கு இடலாம். எடுத்துக்காட்டுக்கு, ஒரு பயனர் கணக்கு உருவாக்கல், ஒரு படம் பதிவேற்றல், ஒரு எழுத்துப் பிழை திருத்துதல், பிடித்த கட்டுரைக்கு நன்றி கூறுதல் போன்ற செயற்பாடுகள். இது போல் வேறு என்னென்ன தூண்டல்களை இடலாம்? இவை உடனே புரிந்து கொண்டு செய்ய இலகுவாக உள்ள செயல்களாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே ஒரே தேவை. அனுபவம் உள்ள விக்கிப்பீடியர்கள் உங்கள் கருத்துகளை உரையாடல் பக்கத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சூலை 2014 மாத முடிவில் புதிதாக ஒரு 25 பங்களிப்பாளர்களைப் (0.5% முகநூல் குழும உறுப்பினர்கள்) பெற்றிருந்தாலும் இம்முயற்சி வெற்றி தான்.

சனி, ஞாயிறுகளைத் தவிர்த்து மாதத்தில் 21 நாட்கள் அல்லது மூன்று வாரங்கள் என்ற கணக்கில் இப்பயிற்சி நடைபெறும். இப்பயிற்சிகளைச் செப்பனிட்டால் முறையான இணையவழி தமிழ் விக்கிப்பீடியா படிப்பு ஒன்றைத் தொடங்கவும் உதவலாம்.

  1. பயிற்சி 1
  2. பயிற்சி 2
  3. பயிற்சி 3
  4. பயிற்சி 4
  5. பயிற்சி 5
  6. பயிற்சி 6
  7. பயிற்சி 7
  8. பயிற்சி 8
  9. பயிற்சி 9
  10. பயிற்சி 10
  11. பயிற்சி 11
  12. பயிற்சி 12
  13. பயிற்சி 13
  14. பயிற்சி 14
  15. பயிற்சி 15
  16. பயிற்சி 16
  17. பயிற்சி 17
  18. பயிற்சி 18
  19. பயிற்சி 19
  20. பயிற்சி 20
  21. பயிற்சி 21