உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:பயனர் நடத்தை அறிதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்கிபீடியாவுக்கு பயனர்களும் பங்களிப்பாளர்களும் அதிகரித்து வரும் வேளையில் அவர்களின் நடத்தையை அறிதல் விக்கிபீடியாவின் தள நிர்வாகத்துக்கும் வளர்ச்சித் திட்டமிடலுக்கும் உதவக்கூடும் என்பதாலும் விக்கிபீடியா எந்தளவுக்கு பயனர்களுக்கு பயனுள்ளதாய் இருக்கிறது என்பதை துல்லியமாக அறியும் பொருட்டும் இப்பக்கத்தில் உள்ள கேள்விகள் அமைந்துள்ளன. பயனர்கள் தங்களுக்கு ஏதுவான நேரத்தில் இக்கேள்விகளுக்கான விடைகளை தருவது வரவேற்கப்படுகிறது. நீங்கள் விரும்பும் கேள்விகளுக்கு மட்டும் மறுமொழி அளிக்கலாம். அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் கட்டாயம் இல்லை.

பதில் அளிக்கும் முறை: பின்வரும் கேள்விகளை வெட்டி Wikipedia:பயனர் நடத்தை அறிதல்/உங்கள் பயனர் கணக்கின் பெயர் என்பது போன்ற பக்கத்தில் ஒட்டி அங்கு விடையளியுங்கள். பிறகு, கீழ்வரும் மறுமொழிகள் பகுதியில் {{Wikipedia:பயனர் நடத்தை அறிதல்/உங்கள் பயனர் கணக்கின் பெயர்}} என்ற குறியை இடுங்கள்.

கேள்விகள்[தொகு]

  1. எவ்வளவு நாட்களுக்கு ஒரு முறை (அல்லது ஒரு நாளைக்கு எத்தனை முறை) தமிழ் விக்கிபீடியா தளத்திற்கு வருகை தருகிறீர்கள்?
  2. விக்கிபீடியாவை எங்கிருந்து பார்க்கிறீர்கள்? (அலுவலகம், கல்விக்கூடம், வீடு, உலாவி மையம்?)
  3. நீங்கள் தவறாமல் பார்க்கும் பக்கங்கள் யாவை?
  4. எந்த கட்டுரையை படிப்பது என்று எப்படி முடிவு செய்கிறீர்கள்?
    1. முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்படும் கட்டுரைகளை மட்டும் படிக்கிறீர்களா?
    2. புதிய கட்டுரைகளை மட்டும் படிக்கிறீர்களா?
    3. அண்மைய மாற்றங்களில் வரும் அனைத்துக் கட்டுரைகளையும் வாசிப்பீர்களா?
    4. ஏதேனும் துறை சார்ந்த கட்டுரைகளை மட்டும் தேடிப் படிப்பீர்களா? என்னென்ன துறைகள்?
    5. நீங்கள் கட்டுரைகள் படிப்பதின் நோக்கம் தகவல் அறியது கொள்வதா இல்லை பங்களிப்பு செய்யும் நோக்கிலா?
  5. ஏதேனும் தகவல் அறிய விரும்பினால் அதை தமிழ் விக்கிபீடியாவில் தேடிப் பார்பதுண்டா?
    1. உங்கள் தேடல்களுக்கு திருப்திகரமான முடிவுகள் கிடைப்பதுண்டா?
    2. தமிழ் விக்கிபீடியா தான் நீங்கள் தகவல் தேடும் முதல் தளமா அல்லது பிற ஆங்கில / தமிழ் தளங்களில் தேடி விட்டு பிறகு இங்கு வந்து தேடுவீர்களா?
    3. செல், தேடு ஆகிய இரு தேடல் பெட்டிகளில் எதை அதிகம் பயன்படுத்துகிறீர்கள்?
    4. தேடல் சொற்களை தமிழில் உள்ளிடுவீர்களா ஆங்கிலத்தில் உள்ளிடுவீர்களா?
  6. தமிழ் விக்கிபீடியாவில் உள்ள அதே தகவல் ஆங்கில வலைப்பக்கங்களில் கிடைக்கும் தருணங்களில் இங்கு வந்து கட்டுரைகளை வாசிப்பதில் ஆர்வம் காட்டுவீர்களா?
  7. நடப்பு நிகழ்வுகள், சமுதாய வலைவாசல் ஆகிய பக்கங்களை எவ்வளவு நாட்களுக்கு ஒரு முறை பார்க்கிறீர்கள்?
  8. ஏதேனும் குறிப்பிட்ட துறை சார் கட்டுரைகள் தமிழ் விக்கிபீடியாவில் குறைந்து காணப்படுவதாக எண்ணுகிறீர்களா? என்னென்ன துறைகள்?
  9. முதற் பக்க மறுவடிவமைப்புக்கு உங்கள் ஆலோசனைகள் ஏதும் உண்டா?
  10. கட்டுரைகளின் நீளம் குறித்து உங்கள் கருத்து என்ன? குறுங்கட்டுரைகள் சலிப்புண்டாக்குவதாகவோ போதிய தகவல்கள் தராததாகவோ உணர்கிறீர்களா?
  11. கட்டுரைகளின் தரம், நம்பகத்தன்மை குறித்த உங்கள் எண்ணம் என்ன?
  12. கட்டுரைகளின் மொழி நடை குறித்த உங்கள் கருத்து என்ன?
  13. கட்டுரைகளுக்கு ஆக்கப் பங்களிப்பு செய்துள்ளீர்களா? ஆம் எனில், உங்களைப் பங்களிக்கத் தூண்டுவது என்ன? இல்லையெனில், உங்கள் ஆர்வமின்மைக்கு காரணம் என்ன?
    1. நீங்கள் முனைப்பான பங்களிப்பாளராக அறியப்படும் பட்சத்தில், நீங்கள் பங்களிப்பு அளிக்காத தினங்களிலும் விக்கிபீடியாவுக்கு வருகை தருவதுண்டா? இல்லை, வருகை தரும் எல்லா நாட்களிலும் பங்களிப்பு செய்கிறீர்களா?
  14. தற்பொழுது உள்ள நிலையில் தமிழ் விக்கிபீடியா யாருக்கு அதிக பயன்மிக்கதாய் இருக்கும் என எண்ணுகிறீர்கள்? (பயன்பாட்டு மிகுதி படி வரிசைப்படுத்தவும்: தமிழ் வழிய பள்ளிச்சிறுவர்கள், ஆங்கில வழிய பள்ளிச்சிறுவர்கள், புலம் பெயர்ந்த தமிழர்கள், தமிழ் மட்டும் அறிந்த கிராமத்தினர், தமிழ் மட்டும் அறிந்தவர்கள், தமிழ் வழிய கல்லூரி மாணவர்கள், ஆங்கில வழிய கல்லூரி மாணவர்கள், தமிழ் ஊடகங்கள், தமிழ் தமிழர் குறித்த தகவல் தேடுபவர்கள்)
  15. வருங்காலத்தில் தமிழ் விக்கிபீடியா வளர்ச்சி அடையும் நிலையில் யாருக்கு அதிக பயன்மிக்கதாய் இருக்கும் என எண்ணுகிறீர்கள்? (பயன்பாட்டு மிகுதி படி வரிசைப்படுத்தவும்: தமிழ் வழிய பள்ளிச்சிறுவர்கள், ஆங்கில வழிய பள்ளிச்சிறுவர்கள், புலம் பெயர்ந்த தமிழர்கள், தமிழ் மட்டும் அறிந்த கிராமத்தினர், தமிழ் மட்டும் அறிந்தவர்கள், தமிழ் வழிய கல்லூரி மாணவர்கள், ஆங்கில வழிய கல்லூரி மாணவர்கள், தமிழ் ஊடகங்கள், தமிழ் தமிழர் குறித்த தகவல் தேடுபவர்கள்)
  16. தமிழ் விக்கிபீடியா தளத்தை மேலும் பயன்படுத்த எளிதாய் ஆக்குவதற்கு உங்கள் ஆலோசனைகள்?
  17. பிற விக்கிமீடியா தமிழ்த் திட்டங்களை நீங்கள் பார்ப்பதுண்டா?
    1. என்னென்ன பிற திட்டங்களை பார்க்கிறீர்கள்? அவற்றை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை அல்லது ஒரு நாளைக்கு எத்தனை முறை பார்க்கிறீர்கள்?
  18. தமிழ் விக்கிபீடியாவை உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளீர்களா? அவர்களுக்கு விக்கிபீடியா ஆர்வம் குறித்த ஆர்வமின்மைக்கு என்ன காரணம்?
  19. தமிழ் விக்கிபீடியாவை மேலும் பிரபலப்படுத்த உங்கள் ஆலோசனைகள்?

மறுமொழிகள்[தொகு]

ரவி[தொகு]

  • எவ்வளவு நாட்களுக்கு ஒரு முறை (அல்லது ஒரு நாளைக்கு எத்தனை முறை) தமிழ் விக்கிபீடியா தளத்திற்கு வருகை தருகிறீர்கள்?
குறைந்தது வாரம் 5 நாட்கள். பெரும்பாலும் அனைத்து நாட்களும். குறைந்தது தினம் இரு முறையேனும். அதிகபட்சம் அலுவலக வேலை நேரங்களில் மனிக்கு ஒரு முறை. அடிக்கடி வருகை தருவதின் நோக்கம் அண்மைய மாற்றங்களை கவனித்து தொகுப்புகளை சரிபார்ப்தற்காக.
  • விக்கிபீடியாவை எங்கிருந்து பார்க்கிறீர்கள்? (அலுவலகம், கல்விக்கூடம், வீடு, உலாவி மையம்?)
பல்கலைக்கழக ஆய்வக கணினி
  • நீங்கள் தவறாமல் பார்க்கும் பக்கங்கள் யாவை?
அண்மைய மாற்றங்கள்
  • எந்த கட்டுரையை படிப்பது என்று எப்படி முடிவு செய்கிறீர்கள்?
பெரும்பாலும் அனைத்துக் கட்டுரைகளையும் ஒரு முறையேனும் வாசிக்கிறேன். பிழை திருத்தும் நோக்கில். குறிப்பில்வழிப்பக்கம், அண்மைய மாற்றங்கள், சிறப்பு:புதிய பக்கங்கள் ஆகியவற்றை பயன்படுத்துகிறேன்
    • முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்படும் கட்டுரைகளை மட்டும் படிக்கிறீர்களா?
இல்லை, அனைத்துக் கட்டுரைகளையும் படிக்க முயல்வதுண்டு.
    • புதிய கட்டுரைகளை மட்டும் படிக்கிறீர்களா?
    • அண்மைய மாற்றங்களில் வரும் அனைத்துக் கட்டுரைகளையும் வாசிப்பீர்களா?
ஆர்வமூட்டும் தலைப்புகளை மட்டும் உடனுக்குடன் படிப்பதுண்டு
    • ஏதேனும் துறை சார்ந்த கட்டுரைகளை மட்டும் தேடிப் படிப்பீர்களா? என்னென்ன துறைகள்?
தனிப்பட்ட விருப்பம் ஏதும் இல்லை.
    • நீங்கள் கட்டுரைகள் படிப்பதின் நோக்கம் தகவல் அறியது கொள்வதா இல்லை பங்களிப்பு செய்யும் நோக்கிலா?
பங்களிப்பு செய்யும் நோக்கே அதிகம்.
  • ஏதேனும் தகவல் அறிய விரும்பினால் அதை தமிழ் விக்கிபீடியாவில் தேடிப் பார்பதுண்டா?
இல்லை, முதலில் பிற ஆங்கிலத் தளங்களில் தேடுவது தான் வழக்கம்.
    • உங்கள் தேடல்களுக்கு திருப்திகரமான முடிவுகள் கிடைப்பதுண்டா?
பாதிக்கு பாதி திருப்தி
    • தமிழ் விக்கிபீடியா தான் நீங்கள் தகவல் தேடும் முதல் தளமா அல்லது பிற ஆங்கில / தமிழ் தளங்களில் தேடி விட்டு பிறகு இங்கு வந்து தேடுவீர்களா?
இல்லை, முதலில் பிற ஆங்கிலத் தளங்களில் தேடுவது தான் வழக்கம்.
    • செல், தேடு ஆகிய இரு தேடல் பெட்டிகளில் எதை அதிகம் பயன்படுத்துகிறீர்கள்?
முதலில் செல், பிறகு அவசியமிருந்தால் தேடு
    • தேடல் சொற்களை தமிழில் உள்ளிடுவீர்களா ஆங்கிலத்தில் உள்ளிடுவீர்களா?
தமிழ் பிறகு அவசியமிருந்தால் ஆங்கிலம்
  • தமிழ் விக்கிபீடியாவில் உள்ள அதே தகவல் ஆங்கில வலைப்பக்கங்களில் கிடைக்கும் தருணங்களில் இங்கு வந்து கட்டுரைகளை வாசிப்பதில் ஆர்வம் காட்டுவீர்களா?
உடனுக்குடன் படிக்கும் ஆர்வம் குறைவு தான். துறை சார் தமிழ்ச் சொற்கள் பரிச்சயமின்மையும் ஒரு காரணம்.
  • நடப்பு நிகழ்வுகள், சமுதாய வலைவாசல் ஆகிய பக்கங்களை எவ்வளவு நாட்களுக்கு ஒரு முறை பார்க்கிறீர்கள்?
பார்ப்பதேயில்லை :(
  • ஏதேனும் குறிப்பிட்ட துறை சார் கட்டுரைகள் தமிழ் விக்கிபீடியாவில் குறைந்து காணப்படுவதாக எண்ணுகிறீர்களா? என்னென்ன துறைகள்?
வரலாறு, தொழில்நுட்பம், mythology, அறிவியல் துறைகள்
  • முதற் பக்க மறுவடிவமைப்புக்கு உங்கள் ஆலோசனைகள் ஏதும் உண்டா?
-
  • கட்டுரைகளின் நீளம் குறித்து உங்கள் கருத்து என்ன? குறுங்கட்டுரைகள் சலிப்புண்டாக்குவதாகவோ போதிய தகவல்கள் தராததாகவோ உணர்கிறீர்களா?
குறுங்கட்டுரைகள் விரிவுபடுத்தல் பரிந்துரைக்கத்தக்கது.
  • கட்டுரைகளின் தரம், நம்பகத்தன்மை குறித்த உங்கள் எண்ணம் என்ன?
40/100 மொத்த கட்டுரைகளையும் கருத்தில் கொள்ளும் போது. தனிப்பட்ட பங்களிப்பாளர்களின் தரம் மெச்சத்தக்கதே.
  • கட்டுரைகளின் மொழி நடை குறித்த உங்கள் கருத்து என்ன?
நன்று
  • கட்டுரைகளுக்கு ஆக்கப் பங்களிப்பு செய்துள்ளீர்களா? ஆம் எனில், உங்களைப் பங்களிக்கத் தூண்டுவது என்ன? இல்லையெனில், உங்கள் ஆர்வமின்மைக்கு காரணம் என்ன?
பங்களிக்கத் தூண்டுவது தமிழ் ஆர்வம்.
    • நீங்கள் முனைப்பான பங்களிப்பாளராக அறியப்படும் பட்சத்தில், நீங்கள் பங்களிப்பு அளிக்காத தினங்களிலும் விக்கிபீடியாவுக்கு வருகை தருவதுண்டா? இல்லை, வருகை தரும் எல்லா நாட்களிலும் பங்களிப்பு செய்கிறீர்களா?
வருகை தரும் எல்லா நாட்களும் பங்களிப்பதில்லை. வேலைப் பளு இருக்கும் பட்சத்தில் அண்மைய மாற்றங்களை பார்த்துக் கொள்வதோடு சரி.
  • தற்பொழுது உள்ள நிலையில் தமிழ் விக்கிபீடியா யாருக்கு அதிக பயன்மிக்கதாய் இருக்கும் என எண்ணுகிறீர்கள்?
    • தமிழ் தமிழர் குறித்த தகவல் தேடுபவர்கள்
    • தமிழ் மட்டும் அறிந்த கிராமத்தினர், தமிழ் மட்டும் அறிந்தவர்கள்
    • தமிழ் வழிய பள்ளிச்சிறுவர்கள்
    • தமிழ் ஊடகங்கள்
    • தமிழ் வழிய கல்லூரி மாணவர்கள்
    • புலம் பெயர்ந்த தமிழர்கள்,
    • ஆங்கில வழிய பள்ளிச்சிறுவர்கள்
    • ஆங்கில வழிய கல்லூரி மாணவர்கள்
  • வருங்காலத்தில் தமிழ் விக்கிபீடியா வளர்ச்சி அடையும் நிலையில் யாருக்கு அதிக பயன்மிக்கதாய் இருக்கும் என எண்ணுகிறீர்கள்?
    • தமிழ் வழிய பள்ளிச்சிறுவர்கள்
    • தமிழ் ஊடகங்கள்
    • தமிழ் மட்டும் அறிந்த கிராமத்தினர், தமிழ் மட்டும் அறிந்தவர்கள்
    • தமிழ் தமிழர் குறித்த தகவல் தேடுபவர்கள்
    • தமிழ் வழிய கல்லூரி மாணவர்கள்
    • புலம் பெயர்ந்த தமிழர்கள்,
    • ஆங்கில வழிய பள்ளிச்சிறுவர்கள்
    • ஆங்கில வழிய கல்லூரி மாணவர்கள்
  • தமிழ் விக்கிபீடியா தளத்தை மேலும் பயன்படுத்த எளிதாய் ஆக்குவதற்கு உங்கள் ஆலோசனைகள்?
-
  • பிற விக்கிமீடியா தமிழ்த் திட்டங்களை நீங்கள் பார்ப்பதுண்டா?
    • என்னென்ன பிற திட்டங்களை பார்க்கிறீர்கள்? அவற்றை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை அல்லது ஒரு நாளைக்கு எத்தனை முறை பார்க்கிறீர்கள்?
விக்சனரி - தினம் இரு முறை, வாரம் 5 நாட்கள், விக்கிநூல்கள் - வாரம் ஒரு முறை, விக்கி மேற்கோள் - பார்ப்பதில்லை.
  • தமிழ் விக்கிபீடியாவை உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளீர்களா? அவர்களுக்கு விக்கிபீடியா ஆர்வம் குறித்த ஆர்வமின்மைக்கு என்ன காரணம்?
உண்டு. நேரமின்மை, போதிய தமிழ் அறிவு, ஆர்வமின்மை. விக்கி conceptலேயே ஈடுபாடு இன்மை
  • தமிழ் விக்கிபீடியாவை மேலும் பிரபலப்படுத்த உங்கள் ஆலோசனைகள்?
-

--ரவி 20:15, 29 டிசம்பர் 2005 (UTC)

நற்கீரன்[தொகு]

எனது ஈடுபாட்டை பல்வேறு தளங்களில் விபரமாக வெளிப்படுத்தியுள்ளேன். அவற்றை மீண்டும் தரமால், சில தெரிந்த கேள்விகளுக்கான பதில்கள்.

  • எவ்வளவு நாட்களுக்கு ஒரு முறை (அல்லது ஒரு நாளைக்கு எத்தனை முறை) தமிழ் விக்கிபீடியா தளத்திற்கு வருகை தருகிறீர்கள்?
தற்சமயம் சற்று அதீதமான ஈடுபாடே காட்டுகின்றேன். இணையத்தில் இருக்கும் பொழுதெல்லாம் அவ்வப்பொழுது அண்மைய மாற்றங்களை கவனித்து கொள்வேன்.
  • விக்கிபீடியாவை எங்கிருந்து பார்க்கிறீர்கள்? (அலுவலகம், கல்விக்கூடம், வீடு, உலாவி மையம்?)
  • நீங்கள் தவறாமல் பார்க்கும் பக்கங்கள் யாவை?
அண்மைய மாற்றங்கள்
  • எந்த கட்டுரையை படிப்பது என்று எப்படி முடிவு செய்கிறீர்கள்?
  • முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்படும் கட்டுரைகளை மட்டும் படிக்கிறீர்களா?
  • புதிய கட்டுரைகளை மட்டும் படிக்கிறீர்களா?
  • அண்மைய மாற்றங்களில் வரும் அனைத்துக் கட்டுரைகளையும் வாசிப்பீர்களா?
  • ஏதேனும் துறை சார்ந்த கட்டுரைகளை மட்டும் தேடிப் படிப்பீர்களா? என்னென்ன துறைகள்?
  • நீங்கள் கட்டுரைகள் படிப்பதின் நோக்கம் தகவல் அறியது கொள்வதா இல்லை பங்களிப்பு செய்யும் நோக்கிலா?
அனைத்து கட்டுரைகளையும் ஒருமுறையாவது படிப்பதுவே வழக்கம். தகவல் அறிவது, பங்களிப்து, இரண்டையும் நோக்கில் கொண்டு வாசிப்பது வழக்கம்.

  • ஏதேனும் தகவல் அறிய விரும்பினால் அதை தமிழ் விக்கிபீடியாவில் தேடிப் பார்பதுண்டா?
  • உங்கள் தேடல்களுக்கு திருப்திகரமான முடிவுகள் கிடைப்பதுண்டா?
தமிழ் விக்கிபீடியா அந்தளவு தகவல்களை இன்னும் ஒருங்கிணைக்கவில்லை!
  • தமிழ் விக்கிபீடியா தான் நீங்கள் தகவல் தேடும் முதல் தளமா அல்லது பிற ஆங்கில / தமிழ் தளங்களில் தேடி விட்டு பிறகு இங்கு வந்து தேடுவீர்களா?
  • செல், தேடு ஆகிய இரு தேடல் பெட்டிகளில் எதை அதிகம் பயன்படுத்துகிறீர்கள்?
  • தேடல் சொற்களை தமிழில் உள்ளிடுவீர்களா ஆங்கிலத்தில் உள்ளிடுவீர்களா?
  • தமிழ் விக்கிபீடியாவில் உள்ள அதே தகவல் ஆங்கில வலைப்பக்கங்களில் கிடைக்கும் தருணங்களில் இங்கு வந்து கட்டுரைகளை வாசிப்பதில் ஆர்வம் காட்டுவீர்களா?
ஆங்கில தலைப்பில் உள்ள் ஒரு கட்டுரை தமிழிலும் இருக்குமானால், நிச்சியம் தமிழ் கட்டுரையையும் படிப்பேன்.
  • நடப்பு நிகழ்வுகள், சமுதாய வலைவாசல் ஆகிய பக்கங்களை எவ்வளவு நாட்களுக்கு ஒரு முறை பார்க்கிறீர்கள்?
நடப்பு நிகழ்வுகள் முறையாக விரிவாக இன்றைப்படுத்த பயனர்கள் போதவில்லை. எனினும், அதற்கான தேவை இனி எழலாம். சமுதாய வாசல் மேன்படுத்த பின் தனிப்பட்ட ரீதியில் கூடிய பயனளிக்கின்றது.
  • ஏதேனும் குறிப்பிட்ட துறை சார் கட்டுரைகள் தமிழ் விக்கிபீடியாவில் குறைந்து காணப்படுவதாக எண்ணுகிறீர்களா? என்னென்ன துறைகள்?
கணிதம், தொழி நுட்பம் (எ.கா: கணினியியல், தமிழ் கணிமை), சமூக விஞ்ஞானம் சார் தகவல்களை பகர கூடிய பல தமிழ் அன்பர்கள் இணையத்தில் இருந்தும், இவை வளர்ச்சி குன்றியே இருக்கின்றன.
  • முதற் பக்க மறுவடிவமைப்புக்கு உங்கள் ஆலோசனைகள் ஏதும் உண்டா?

I think we can give more external links in the first page to the following interwiki languages, as in the te Wikipedia.

Set1 (11): International languages and highly developed Wikipedias (and because significant Tamil emigrants speak these languages): English, German, French, Japanese, Dutch, Swedish, Chinese, Russian, Italiano, Polish, Spanish

Set2 (10): Dravidan and Indian Lanagues: Hindi, Malayalam, Telgue, Kannada, Bengali, Gurathi, Marathi, Urdu, Sanskrit,

Set3 (6): Tamil emigrant population languages: Sinhala, Arab, Malay, Norwigien, Africani, Simple English

Also, Tamil Embassy and Multilingual coordination links could be given.

  • கட்டுரைகளின் நீளம் குறித்து உங்கள் கருத்து என்ன? குறுங்கட்டுரைகள் சலிப்புண்டாக்குவதாகவோ போதிய தகவல்கள் தராததாகவோ உணர்கிறீர்களா?
ஒரு வரி கட்டுரைகள் நிச்சியம் சலிப்புதான். ஒரு வரி கட்டுரைகள் தமிழ் விக்கிபீடியா புள்ளி தரவுகளை மிகைப்படுத்துகின்றன. குறைந்த பட்சம் ஒரு பந்தியாவது (3 வரிகள்) தருவது நன்று.
  • கட்டுரைகளின் தரம், நம்பகத்தன்மை குறித்த உங்கள் எண்ணம் என்ன?
ஒருமித்த பதில் தர முடியவில்லை. உதாரணமாக இந்த மூலிகை இந்த பலனை தரும் என்று ஆதாரம் இன்றி தருவுதை நம்பமுடியாது. குறைந்த பட்சம் தகவல் மூலத்தையாவது தரலாம். அதேவேளை சில கட்டுரைகள் தகவல் செறிவாகவே உள்ளன. குறைந்த பட்சம் தரமான வெளி இணைப்புகளை தருவதே கட்டுரையின் தரத்தை மல மடங்கு உயர்த்தும்.
  • கட்டுரைகளின் மொழி நடை குறித்த உங்கள் கருத்து என்ன?
I have shred my thoughts else where about this question.
  • கட்டுரைகளுக்கு ஆக்கப் பங்களிப்பு செய்துள்ளீர்களா? ஆம் எனில், உங்களைப் பங்களிக்கத் தூண்டுவது என்ன? இல்லையெனில், உங்கள் ஆர்வமின்மைக்கு காரணம் என்ன?
Yes....
  • நீங்கள் முனைப்பான பங்களிப்பாளராக அறியப்படும் பட்சத்தில், நீங்கள் பங்களிப்பு அளிக்காத தினங்களிலும் விக்கிபீடியாவுக்கு வருகை தருவதுண்டா? இல்லை, வருகை தரும் எல்லா நாட்களிலும் பங்களிப்பு செய்கிறீர்களா?
பங்களிக்காத சமயங்களிலும் வருவதுண்டு. விக்கிபீடியாவில் குறிப்புகளை குறிப்பதும் உண்டு. விக்கிபீடியா சிறு சிறு கட்டுரைகளை உருவாக்க தூண்டுகின்றது. எப்பொழுதும் மேன்படுத்திகொள்ளலாம் தானே என்பது ஒரு வித மிதமான போக்கையும் தூண்டுகின்றது.
  • தற்பொழுது உள்ள நிலையில் தமிழ் விக்கிபீடியா யாருக்கு அதிக பயன்மிக்கதாய் இருக்கும் என எண்ணுகிறீர்கள்? (பயன்பாட்டு மிகுதி படி வரிசைப்படுத்தவும்: தமிழ் வழிய பள்ளிச்சிறுவர்கள், ஆங்கில வழிய பள்ளிச்சிறுவர்கள், புலம் பெயர்ந்த தமிழர்கள், தமிழ் மட்டும் அறிந்த கிராமத்தினர், தமிழ் மட்டும் அறிந்தவர்கள், தமிழ் வழிய கல்லூரி மாணவர்கள், ஆங்கில வழிய கல்லூரி மாணவர்கள், தமிழ் ஊடகங்கள், தமிழ் தமிழர் குறித்த தகவல் தேடுபவர்கள்)
தமிழ் சார் ஆர்வலர்கள்
  • வருங்காலத்தில் தமிழ் விக்கிபீடியா வளர்ச்சி அடையும் நிலையில் யாருக்கு அதிக பயன்மிக்கதாய் இருக்கும் என எண்ணுகிறீர்கள்? (பயன்பாட்டு மிகுதி படி வரிசைப்படுத்தவும்: தமிழ் வழிய பள்ளிச்சிறுவர்கள், ஆங்கில வழிய பள்ளிச்சிறுவர்கள், புலம் பெயர்ந்த தமிழர்கள், தமிழ் மட்டும் அறிந்த கிராமத்தினர், தமிழ் மட்டும் அறிந்தவர்கள், தமிழ் வழிய கல்லூரி மாணவர்கள், ஆங்கில வழிய கல்லூரி மாணவர்கள், தமிழ் ஊடகங்கள், தமிழ் தமிழர் குறித்த தகவல் தேடுபவர்கள்)
மாணவர்கள்
தமிழ் சார் ஆர்வலர்கள்
தமிழ் சார் ஊடகத் துறையினர் (சினிமா உட்பட)
ஆராச்சியாளர்கள்
துறை சார் ஆர்வலர்கள்
பொது மக்கள்
என பல தரப்பட்டோரும் தமிழ் விக்கிப்பீடியாவை பயன்படுத்தகூடியதற்கான சாத்தியம் உண்டு.
  • தமிழ் விக்கிபீடியா தளத்தை மேலும் பயன்படுத்த எளிதாய் ஆக்குவதற்கு உங்கள் ஆலோசனைகள்?
I have shared my thoughts elsewhere.
  • பிற விக்கிமீடியா தமிழ்த் திட்டங்களை நீங்கள் பார்ப்பதுண்டா?
    • என்னென்ன பிற திட்டங்களை பார்க்கிறீர்கள்? அவற்றை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை அல்லது ஒரு நாளைக்கு எத்தனை முறை பார்க்கிறீர்கள்?
விக்சனரி
  • தமிழ் விக்கிபீடியாவை உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளீர்களா? அவர்களுக்கு விக்கிபீடியா ஆர்வம் குறித்த ஆர்வமின்மைக்கு என்ன காரணம்?
I have introduced to a few, and the responses have been positive. Some have indicated that they are willing to contribute. But, I can certainly do more to introduce Tamil Wikipedia to the wider community.
  • தமிழ் விக்கிபீடியாவை மேலும் பிரபலப்படுத்த உங்கள் ஆலோசனைகள்?
I have shared my thoughts elsewhere.

--Natkeeran 21:16, 30 டிசம்பர் 2005 (UTC)