வான்மீகியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வான்மீகியார் சங்ககாலத் தமிழ்ப் புலவர். இவரது பாடல் சங்கநூல் தொகுப்பில் ஒன்றே ஒன்று உள்ளது. அது புறநானூறு 358.

சமற்கிருதத்தில் இராமாயணம் எழுதிய வான்மீகி முனிவர் இவர் எனக் கொள்வாரும் உண்டு.

தமிழ்ப்புலவர் வான்மீகியார் சொல்லும் செய்தி:

பரிதியைச் சூழ்ந்துள்ள மாநிலம் (பூமி)
  • பரிதி சூழ்ந்த இப் பயங்கெழு மாநிலம் ஒருபகல் எழுவர் எய்தி அற்றே

உலகைச் சூரியன் சுற்றிவருகிறது என்று தமிழர்கள் எண்ணவில்லை. சூரியனை உலகம் சூழந்திருக்கிறது எனக் கண்டறிந்திருந்தனர். மாநிலமாகிய இந்த உலகம் முழுவதையும் ஒரே பகலில் ஏழுபேர் பெற்று ஆள்வது போல் உலக வாழ்க்கை நிலையில்லாத்து. எனவே ...

  • உலக வாழ்க்கையையும், தவத்தையும் சீர்தூக்கிப் பார்த்தால் தவமே மேன்மையானது. காரணம் திருமகள் பற்று விட்ட தவசிகளைத் திருமகள் பற்றிக்கொள்கிறாள். பற்றுக் கொண்டவர்களைத் திருமகள் கைவிட்டுவிடுகிறாள். அதனால் காதலர்கள் (முதுமையில்) பற்றை விட்டு தவத்தை மேற்கொள்கின்றனர்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வான்மீகியார்&oldid=3404695" இலிருந்து மீள்விக்கப்பட்டது