வாணாசூரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாணாசூரன் என்பவர் அரக்கர் குலத்தில் பிறந்த சிவபக்தன் ஆவார். இவர் சைவ தொன்மவியலின் படி கண்ணனின் சம்பந்தி.

வாணாசூரன் காஞ்சிபுரம் வாணேசுடவரர் கோயிலில் வழிபட்டு கணங்களுக்கு தலைமையைப் பெற்றான் என்பது வரலாறு.[1] வாணசூரனின் மகள் உசை என்பவளுக்கும் கிருஷ்ணனின் மகன் அநிருத்தனுக்கும் காதல் ஏற்பட்டது.

வாணாசூரன் அதனை அறிந்து அநிருத்தனைச் சிறைப்பிடித்தான். மகனை மீட்க கண்ணன் வந்து வாணாசூரனுடன் சண்டையிட்டான். இதற்கிடையே சிவபெருமானும் அவர் மனைவி மற்றும் குழந்தைகளும் வாணாசூரன் வீட்டில் இருந்தமையால், கண்ணன் சிவபெருமானுடன் சண்டையிட்டார். அவ்வான சண்டையின் போது ஜ்வராபக்ன மூர்த்தி தோன்றினார்.

ஆதாரங்கள்[தொகு]

  1. "shaivam.org | வாணேசம் (வாணேசுவரர்) | தல வரலாறு". Archived from the original on 2015-05-02. பார்க்கப்பட்ட நாள் 2016-10-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாணாசூரன்&oldid=3571179" இலிருந்து மீள்விக்கப்பட்டது