வளைய வலையமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வளைய வலையமைப்பு

வளைய வலையமைப்பு என்பது கணினி வலையமைப்பில் ஒரு வகையாகும். இதில் ஒவ்வொரு கணினியும் மற்ற இரு கணினிகளுடன் இணைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு தொடர்ந்து கணினிகள் இணைக்கப்பட்டு ஒரு வளையத்தை உருவாக்குகின்றன. இதுவே வளைய வலையமைப்பு என்று அழைக்கப்படுகிறது. வளைய வலையமைப்பில் எந்த இரண்டு இணைப்பிற்கும் ஒரே வழியே உள்ளதால் ஓர் அந்தத்தில் (Node) உள்ள இணைப்பு பழுதடைந்தால் முழுவலையமைப்புமே பாதிப்படையும். கண்ணாடியிழைகளூடாகத் தரவுப் பரிமாற்றத்தில் (FDDI) வலையமைப்பில் பிழை ஏற்படும் போது மணிக்கூட்டுத் திசையாகவும் அதற்கு எதிர்த் திசையாகவும் தரவு அனுப்படுவதால் இந்தப் பிரச்சினை அங்கு இல்லை. இது C வளைய வலையமைப்பு அல்லது ஐபிஎம் டோக்கின் றிங் வலையமைப்பு எனப்படும் இங்கு பௌதீகரிதியாக (Physically) விண்மீன் வலையமைப்பு மாதிரி நடுவில் கணினி சுவிச்சுடன் இணைக்கப்பட்டிருக்கும் பின்னர் தர்க்கரீதியாக வளைய வலையமைப்பில் நடைமுறைப்படுத்தப்படும்.

பெரும்பாலான வலையமைப்புக்கள் மேலதிகமாக சுழலும் திசைக்கு எதிராகவும் ஓர் வலையமைப்பை ஏற்படுத்திக்கொள்ளும்.

அநுகூலங்கள்[தொகு]

  • பழைய வலையமைப்பில் எல்லாச் சாதனங்களுமே டோக்கின் (Token) ஐப் பெற்று அதை அநுப்பக்கூடிய வசதி.
  • அதிக வேலைப் பழுவுள்ள வலையமைப்பில் விண்மீன் வலையமைப்பை விட வினைத்திறனாக இயங்கக்கூடியது.
  • டோக்கின் றிங் ஐப் பாவித்துப் பெரிய வலையமைப்பை உருவாக்கலாம்.
  • ஒவ்வொரு கணினிக்கும் இடையிலான தொடர்பை நிர்வாகிக்க கணினி வழங்கி (சர்வர் server) தேவையில்லை.

பிரதிகூலங்கள்[தொகு]

  • ஒரு ஒழுங்காக வேலை செய்யாத கணினி அல்லது வலையமைப்பு அட்டை முழு வலையமைப்பிற்குமே பிரச்சினையை உண்டு பண்ணும்.
  • இவ்வலையமைப்பில் இணைப்புக்களை நகர்த்துதல், சேர்த்தல் மற்றும் சாதனங்களை மாற்றுதல் வலையமைப்பைப் பாதிக்கும்.
  • சாதாரண ஈதர்நெட் வலையமைப்பு அட்டையை விட இந்த வலையைமைப்பு அட்டை விலைகூடியது.
  • சாதாரண ஈதர்நெட் வலையமைப்பை விட இந்த வலையைமைப்பு மெதுவானது.

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வளைய_வலையமைப்பு&oldid=2563651" இலிருந்து மீள்விக்கப்பட்டது