வலைவாசல்:யாழ்ப்பாணம்/தகவல்கள்/1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யாழ்ப்பாணக் கோட்டை வாயில்
யாழ்ப்பாணக் கோட்டை வாயில்
  • யாழ்ப்பாணக் கோட்டை யாழ்ப்பாணத்தை ஐரோப்பியக் குடியேற்றவாத ஆட்சியாளர்கள் ஆண்ட காலத்தில் கட்டப்பட்ட கோட்டையாகும்.
  • 1980களின் இறுதிக்காலம் வரை நல்ல நிலையில் இருந்த இக் கோட்டை பின்னர் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் தாக்கத்தால் தற்போது சிதைவடைந்த நிலையில் காணப்படுகின்றது.
  • யாழ்ப்பாணத்தை ஒல்லாந்தர் 1658 ஜூன் 22இல் கைப்பற்றிய அடுத்த நாள் ஜூன் 23 1658இல், மேற்படி கோட்டையை அவர்கள் கைப்பற்றி அதனை இடித்துவிட்டு ஐங்கோண வடிவிலமைந்த புதிய கோட்டையைக் கட்டினார்கள்.
  • 1984-1987 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தின் பெரும்பகுதி தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோதும், யாழ்ப்பாணக் கோட்டை இராணுவத்தின் வசமே இருந்து வந்தது.
  • 1629இல் இது உபயோகத்திலிருந்ததெனினும், 1637இல் கூட இது முற்றாகக் கட்டிமுடிக்கப்படவில்லையென்றே தெரிகிறது.